உலகம் அறிந்த அத்தனை மொழிகளிலும் சில வார்த்தைகள் எப்படி கூறினாலும் புரிந்து கொள்ள  துவாக மனிதன் உருவாக்கிவிட்டிருக்கிறான் .அவன் தன் மொழியையும் மனிதத்தையும் கலவை செய்து தனக்குள் ஒரு உருவகத்தை உருவாக்கி அதை  "இவன் " என்று வெளிக்கொணரும் போது தான் அவனது சுயம் மிக மிக இலகுவாக வெளிப்படுகிறது.இதற்கு இந்தியனும் ,அமெரிக்கனும் ,எவனும் விதிவிலக்கு அல்ல.மொழி என்ற ஒரு உயிர் நாடி மனிதனிடம் கலந்து எத்தனை கோடி வருடங்கள் ஆயினும் மனிதன் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேறு எந்த ஊன்று கோளையும்  நாடவே இல்லை.மொழி தான் அவனுக்கும் அறிவிக்கமால் அவனுடன் உருவகித்து கொண்டிருக்கிறது.எத்தனை மொழி வரினும் எனக்கு நான் முதன் முதலில் பேசிய மொழிக்கு ஒரு வகை சிறப்பிடம் உண்டு என்று கூறும் மனிதர்களை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.தாய் மொழியை மறக்காதீர்கள் ,தாய் மொழியில் பேசுங்கள்,தாய் மொழியில் பெயர் வையுங்கள் என்ற கோரிக்கைகளும் கூச்சல்களும் தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் தோன்றியதாக எனக்கு அதிகம் தெரியவில்லை.கர்நாடகா , ஆந்திரா ,மராத்தி மக்களிடமும் இருக்கிறது.எல்லாம் தமிழ் மற்றும் ,சார்ந்து வந்த மொழிகளிடம் மட்டும் தான்.

ஒரு மிக மிக உண்மையான கருத்து என்ன வென்றால் இங்கிலாந்து தவிர வேறு எந்த ஐரோப்பிய நாட்டிலும் ஆங்கிலம் பேசுவது கிடையாது.அனைவரும் ஆங்கிலம் ஒரு துணையாக மட்டுமே வைத்திருக்கிறார்களே தவிர அது அவர்களுக்கு வேலை தரும் விஷயமோ அல்ல அது சமுதாய உயர்வை தரும் மொழியோ அல்ல.இங்கு எல்லா முக்கியமான கருத்தரங்கு முதல் ,செய்திகள் ,தலையங்க நடவடிக்கை ,பரிமாறுதல்,மோதல் ,இயல் இசை நாடகம் ,மேதகு செயல்கள் வரை எல்லாமே அவர் அவர் மொழிகளில் மட்டுமே இருக்கிறன்றன.இந்த நாட்டில் நீ பிழைக்க வேண்டும் என்றால் என் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு கட்டளையாகவோ அல்ல வேண்டுதலாகவோ அல்ல ,இது ஒரு நிர்பந்தமாகவே ஆகி விட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

அவர்கள் தங்கள் மொழியை பற்றியோ அல்ல அதன் மேலுமையை பற்றியோ அல்ல மாறுதலை பற்றியோ அதிகம் பேசாமல் இருப்பதாலே அவர்களால் அவர்கள் மொழியின் வீரியத்தை இன்றும் ரசிக்க முடிகிறது.நான் என் மொழி அழிகிறது அந்நிய மொழி ஊடுருவி விட்டது என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தே இன்று வரை என் மொழியை பேசிய பாடில்லை.மொழி என்ற ஒரு பொருள் என்று ஒரு சமுதாயத்தில் அதிகம் உராய்வு கொள்கிறதோ அன்றே அந்த சமுதாயம் அந்த மொழியை விட்டு விலகி செல்ல  நினைக்கிறது   என்று அர்த்தம்.

மொழியின் மீது பெருமையோ ,பழங்கதையை பேசுவதையோ ,அந்நிய மொழியை எதிர்ப்பதையோ ஒரு புத்திசாலி தனமான செயலே அல்ல,மொழியை சமுதாயம் தன் கட்டுகோப்பில் இன்றியமையாததாக மாற்றும் போது தான் மொழி வாழும்.இதை நம் தமிழ் ஆர்வலர்களும் கல்வியாளர்களும்,சத்தியமாக அறிந்திருக்க மறக்கிறார்கள்.ஆர்பாட்டங்களும் கட்டுபாடுகளும் மொழியை அதன் அழிவை சுட்டி காட்ட மட்டுமே ஏதுவாக இருக்கிறது.

நேற்று ஒரு இரவு நேர கேளிக்கை அரங்கத்தில் அமர்ந்து இருக்கும் போது ஒரு டென்மார்க் இளைஞன் சென்னை பற்றியும் கோவா பற்றியும் பேசி கொண்டிருந்தான்.அவன் விக்கி யில் இந்தியாவில் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் எழுத்துருவில் இருப்பதை பற்றி ஆச்சரியப்பட்டான்.இந்தியாவின் 
முதன்மை மொழி ஆங்கிலம் தானே என்று கேட்ட போது எனக்கு மறுக்க முடியவில்லை.ஆனாலும் ஒரு பெயர் அளவிற்கு மறுத்து இல்லையப்பா எங்களுக்கு முதன்மை மொழி என்று ஒன்றும் கிடையாது ஹிந்தி அதிக மக்கள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் ஒரு மொழி என்று விளக்கம் கூறினேன்.அவனுக்கு சமாதனம் ஆகாமல் அவன் கேட்ட கேள்விகள் 
"உனக்கு ஹிந்தி தெரியுமா "
"கொஞ்சம் தெரியும் "
"உன் ஹிந்தி கார நண்பனிடம் எப்படி பேசி கொள்வாய் ?"
"அவன் ஹிந்தியில் பேசுவான் நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவேன் !"
"உங்கள் ஊரில் பள்ளியில் என்ன மொழி முதன்மை "
"ஆங்கிலம் "
"உங்கள் வேலை மற்றும் அலுவலக சம்பந்தமான தொடர்புகள் என்ன மொழி ?
"ஆங்கிலம் "
"உனக்கு உன் மொழியில் கை எழுது போட தெரியுமா "
"தெரியும் "
"எல்லோருக்கும் தெரியமா "
"தெரியாது "
"எந்த மொழியில் தெரியும் "
"ஆங்கிலம் "
"உனக்கு உன் மொழியில் உன் வீடு மற்றும் அலுவலக தொடர்பான விஷயங்களை தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறதா ( ஆங்கிலம் இல்லையேல் தமிழ் )"
"இல்லை "
"உன்னால் உன் நண்பனை  தொடர்ந்து (மறைமுகமாக ) தமிழில் ஒரு மணிநேரம் அதிக மொழி கலப்பு இல்லாமல் பேச வைக்க முடியுமா ?"
"முடியவே முடியாது "
"ஆங்கிலத்தில் பேச வைக்க முடியுமா "
முடியும் ,நான் ஆங்கிலத்தில் பேசினால் அவனும் ஆங்கிலத்தில் தான் பேசுவான் 

அவன் கேட்ட கேள்விகள் எதோ உரைக்க வைத்தது.இந்த மொழியை எங்கோ கொண்டு சென்று இன்று தொலைத்து விட்டு புலம்புவதில் எந்த நியாயமும் இல்லை என்று தான் பட்டது.மொழி உணர்வு ,மொழி ஆர்வம் என்பது முட்டாள் தனமான பேச்சு.மொழியை ஒரு இன்றியமையாத செயலாக எங்கு இருந்து தொடங்க வேண்டும் ????


வாழ முடியாதவனுக்கும்,
வாழ்ந்து கெட்டவனுக்கும் மட்டும் தான் புரியும்;
அந்த ரயிலில் குருடன் பாடும்
கண்ணதாசன் பாடல் !!!

உயர்ந்தவன் என்பான் ! எங்கு அவன் சொல்லும்
தாழ்ந்தவனிடம் இருந்து பிரித்து கொள்கிறான்
என்று அறிகிலேன் !
அவன் எண்ணம் உயர்ந்ததா என்றால்
காரி உமிழ்வேன் !!!

சாதிகள் இல்லையடி பாப்பா
என்று தினமும் கற்பான் தமிழன்
முதல் நெல்லையும் சாதியின் பெயரால் தான்
விதைப்பான் மனிதன்!

மதத்தை சொல்லி கொல்வான் நாட்டை !
சாதியை சொல்லி வதைப்பான் மனிதத்தை !

நாதியற்று போகும் போதும் ,
சாதியை எலும்பாய் கவ்வி
நீதி சொல்லும் மனிடர்களெல்லாம்
கொண்ட வியாதி -- சாதி

மடமை இருந்தாலும் போதும்
பராசக்தி பேதைமை சொல்லாமல் இருக்க !

புண்ணியம் வேண்டாமல் இருந்தாலும் -பராசக்தி
மனிதம் கொள்ளாமல் இருக்க

தனித்துவம் இல்லாவிடினும் -பராசக்தி
மகத்துவம் ஓதாமல் இருக்க

ஓதி வேதம் கற்காவிடினும் -பராசக்தி
சாதியை கற்காமல் இருக்க!


இங்கு கல்வியும் சாதி
களவியும் சாதி
பணியும் சாதி
பிணியும் சாதி
மண்ணும் சாதி அதை பிரித்த
மனிதனும் சாதி
சாதி சாதி என்று எதை சாதித்தார் என்று
தெரியவில்லையே பராசக்தி

நீ எங்கே பாரதி?
உன்னை கற்றது குற்றமா !
அல்ல நீ பாரதி ஆகி போனது குற்றமா ?
உன் கனவுகள் எதுவும் பலிக்காமல்
நீ கடவுள் ஆனாய்!
உன் கனவுகளை துரத்தியதால்
நான் மூடன் ஆனேன் !

உன்னை போதித்தவர் சொல்லும் பாடங்கள்
புத்தகத்தோடு போன கொடுமையை
என்று உன்னிடம் சொல்வேன் ???

உன் பின் வந்தவரும் நட்ட மரங்களும்
விதைத்தது சாதி என்ற விதையை மட்டுமே !

நீ கண்ட கனவுகள் என்றுமே இந்த
மனிதரிடம் பலிக்காது !
உன் பராசக்தி என்றுமே இல்லை !
பராசக்தியை வேண்டும் எனக்கும் சாதி பிரித்து தான்
இந்த தமிழனின் சாதனை !
உனக்கும் எனக்கும் வேதனை! இதை
உன்னிடம் எங்கனம் உரைப்பேன் இதனை !

இன்பமும் ஓர் கணத் தோற்றம் -இங்கு

இளமையும் செல்வமும் ஓர் கணத் தோற்றம்

துன்பமும் ஓர் கணத் தோற்றம் -இங்கு

தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

யாரும்மில்லை அது பாரதியின் பாடல் தான் !!!


சில விஷயங்கள் என்னை யோசிக்க வைத்து கொண்டிருக்கிறது.இதை பற்றி எழுதலாமா என்று பல நாள் யோசித்து வேண்டம் என்று விட்டு இருக்கிறேன்.ஆனால் என் வாழ்நாளில் பல நாட்கள் அதனாலே தேங்கி விட்டது என்று சில கனங்கள் யோசித்து உண்டு.


நேற்று என் நண்பன் ஒருவன் தன் வீட்டில் அவன் காதலிக்கும் பெண்ணை பற்றி பேசியது பற்றி என்னிடம் பரிமாறி கொண்டிருந்தான்.அவன் சொல்லும் பொழுது எனக்கு வயதாகி விட்டதா அல்ல என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லையா என்று கூட தோன்றியது.வயதாகி விட்டது என்பது உண்மை தான்.அவன் வீட்டில் பெண்ணும் ஒரே ஜாதி என்பதால் பெரிய அளவில் விவாதம் வர வில்லை.பெண் வீட்டில் தங்கள் பெண் சந்தோசம் தான் முக்கியம் என்பதால் பச்சை கொடி காட்டி விட்டார்கள்.இருவருக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை என்பது அவர்கள் முகத்திலே தெரிந்தது.இருவரும் நேற்று என்னை சந்தித்த பொழுது நான் முந்தைய தின Hangover_ இல் இருந்து தெளியாமல் இருந்தேனோ என்னவோ ,என்னை பார்த்து "Are you OK ?" என்று கேட்டு கொண்டே இருந்தார்கள்.உண்மையில் எனக்கு அவர்கள் மீது அக்கறை உண்டு ,அதனால் எனக்கும் அளவில்லாத சந்தோசம் இருந்தது .


நேற்று வீட்டிற்கு வந்து தனியே அமர்ந்து இருக்கும் பொழுது தான் எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.காதல் வெற்றி பெறும் சந்தோசத்தை பார்த்தாலே என்னால் ரசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் கொஞ்சம் அடி மனதில் பொறாமையாக இருந்தது எனக்கு தெரிந்தது.காரணம் இருக்கலாம் ,அதற்கு வேறு உந்துதலும் இருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால் எனக்கு வெறுப்பு,கோபம்,ஏமாற்றம் ,தவிப்பு,தனிமை ,தேடல் எல்லாம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக காதலில் இருந்து விலக்கி இன்று இருக்கும் ஒரு நிலைக்கு தள்ளி விட்டது.


நான் இழந்து போன நாட்களை பற்றியோ நான் காதலித்த பெண்ணை பற்றியோ எனக்கு பேச விருப்பம் இல்லை.ஆனால் சில நாட்கள் முன் இருவரும் சந்தித்தோம் ஏதோ ஒரு கல்யாணத்தில் இருவரும் பார்த்து கொள்ள அவ்வளவு சிரமப்பட்டோம் .இருவரும் அந்த இடத்தை விட்டு நகர அவ்வளவு முனைப்பு காட்டினோம்.கொஞ்ச நேரத்தில் என்னை நினைத்து பார்த்தேன் " காலம் நகர்ந்து விட்டது,மறுக்கப்பட்டதை தோண்டி எடுத்து மன்னிப்பு கேட்க முடியாது ,மன்னித்தல் என்பது முதலில் உன்னிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் " என்று தோன்றியது.உண்மை காலம் வெகுவாக நகர்ந்து விட்டது.நான் பார்த்த பெண்ணும் அவள் இல்லை.அவள் பார்த்த நானும் அவன் இல்லை.அது தான் உறவுகளுக்கு இருக்கும் வீரியம் ,வெறுமை .வீரியம் நம்மை பற்றிய நினைவுகள் ,வெறுமை நாம் நிரப்பிய நாட்கள் .இதில் எந்த பகுதி மிகுந்து இருக்கிறதோ உறவு நிலைக்கிறது அல்லது இழக்கிறது .


அன்று முதல் என் மனதில் எந்த ஒரு எண்ணமும் அந்த பழைய நினைவுகளுக்கு இல்லை என்று உணர்ந்து கொண்டு திரிந்து வந்தேன்.சில நாட்கள் முன்பு அந்த பெண்ணிற்கு கல்யாணம் என்ற செய்தி வந்த பொழுது கூட நான் மிகவும் சந்தோசம் கொண்டேன்.அந்த நிகழ்வுக்கு காத்திருந்தது என்னவோ உண்மை தான்.என் சார்பில் என் வாழ்த்தை அந்த தம்பதிகளுக்கு சேர்த்துவிட்டேன் என்ற நிம்மதியும் இருந்தது.


இன்றைய நிலைமையில் யோசித்து பார்க்கும் பொழுது காதல் ஒரு பகடை காய் என்றே எனக்கு தோன்றுகிறது.புரிதல் ,அன்பு எல்லா காதலிலும் இருக்கும் ஆனால் அதன் அடுத்த கட்டம் திருமணத்திற்கு முன்னேருபவன் தான் வெல்பவன்.மற்றவன் காதலில் தோற்றவன் என்ற முத்திரை குத்தி திரிய விடபடுகிறான்.இதில் அவன் செய்த குற்றமும் ஒன்றும் இல்லை ,சுற்றம் செய்த குற்றம் ஒன்றும் இல்லை.அவன் தான் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்வான் ,அது வரை காத்திருப்பான்.
பல நாள் நான் யோசித்து இருக்கிறேன்,எனக்கு Arranged marriage சரி பட்டு வராது என்று.உண்மையில் எனக்கு திருமணமே சரி பட்டு வருமா என்பதை நான் மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன்.என் தந்தையிடம் சொன்னால் "நானா நீ லவ் பண்ண வேண்டாம்னு சொன்னேன் நீதான் முடியாதுன்னு சொன்ன?" என்கிறார் .

ஆனால் என் பெற்றோரின் வேண்டுதலுக்கு சரி பெண் பாருங்கள் என்று தலை ஆட்டி விட்டேன்.இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சில பெண்களை வேண்டாம் என்பேன் ,சில பெண்கள் என்னை நிராகரிக்கும்!!! அந்த ஆட்டதிற்கு நானும் தயாராக வேண்டும் .அது தானே அந்த ஆட்டத்தின் விதி.


இதில் எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் தெளிவாக புதிதாக வர வேண்டும் .எனக்கு தெரியவில்லை என் மனம் குழம்புகிறது என்று சொல்ல மாட்டேன் ஆனால் என்னால் ஒரு முடிவு எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.நான் எடுக்காத முடிவுகள் எல்லாம் எனக்கு தோல்வியிலேயே கொண்டு சேர்த்து இருக்கின்றன.


பல நண்பர்களுக்கு என் மீது வேறுபாடு இருக்கலாம் .என் நடவடிக்கை மீது.உண்மை தான் .என்னை ஒருபொருட்டாக கொள்ளாமல் நினைத்து கொண்டு திரிந்த நாட்களில் நான் பல நண்பர்களை இழந்து இருக்கிறேன்.எத்தனையோ நண்பர்கள் இன்றும் என் மீது பகையோ அல்ல நிகழ்வோ அல்லாமல் விலகி இருக்கிறார்கள். அவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கூட கிடையாது.காரணம் தேட முடியாது.சத்தியமாக அவர்களை இழந்து இருக்கிறேன் .வெள்ளித்திரை படத்தில் பிரிதிவிராஜ் முடிவில் பிரகாஷ்ராஜை பார்த்து ஒரு வசனம் சொல்லுவான் " எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் ஆனால் சில பேருடன் விலகி இருப்பது நல்லது " அது போல் தான் இதுவும்.என் கடந்த காலம் தந்த பரிசுகளில் ஒன்று !


இன்று எனக்கு இருக்கும் நெருக்கமான நண்பர்கள் பலர் நான் கடந்து வந்த வழி முழுவதும் என்னுடன் இருந்தவர்கள்.அவர்கள் ஆர்வம் கொண்டு அல்ல அவர்கள் அக்கறை கொண்டு வந்தவர்கள்.அவர்கள் என்றுமே என் நண்பர்களாக இருப்பார்கள் .இன்று விலகி இருக்கும் பலரும் என்னை பார்த்து கொண்டு தான் இருப்பார்கள் ,ஏன் எனில் அத்தனை பெறும் என்னுடன் மிக மிக நெருக்கமாக இருந்தவர்கள்.இதில் இந்த பதிவில் கமெண்ட் போடும் பல நண்பர்கள் உட்பட .யாரும் ஏன் என்ற காரணம் சொல்ல முடியாமல் விலகி இருந்து என்னுடன் இருப்பவர்கள். வழிகள் மாறுபட பயணத்தை மாற்றி கொண்டவர்கள்.


ஏன் இந்த திடீர் சுய ஆராய்ச்சி என்று யாரும் கேட்க வேண்டாம் .நான் தமிழில் எழுதுவதை நிறுத்தலாம் என்று நினைத்து இருக்கிறேன்.ஏதோ ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.எத்தனையோ முறை இதை மாற்றி கொள்ள வேண்டும் அதை மாற்றி கொள்ள வேண்டும் என்று யோசித்த பல நாட்களில் என்னுடன் இருக்கும் ஒரு வித வெறுமையை மாற்றி கொள்ளலாமா என்று யோசித்து தான் இந்த எழுத்தை மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.


பல பொழுதுகள் தனியே நடந்து செல்லும் பொழுது ,பாக்கெட் பாக்கெட் ஆக சிகரட் புகைக்கும் பொழுது ,கூட்டம் கூட்டமாக அரட்டை அடிக்கும் பொழுது ,சினிமா பார்க்கும் பொழுது ,அந்த ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது எல்லா நாட்களிலும் ஒரு வித எண்ணம் மேலோடி கொண்டுதான் இருந்தது.
அந்த எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ,ஆனால் நான் செய்யும் ஒரு காரியமும் எனக்கு எந்த வித பதிலையோ திருப்தியையோ தரவில்லை.என் தவறுகளில் இருந்து திருந்த எனக்கு தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.


மும்பை சென்ற பொழுது விமானத்தில் அமர்ந்து இருந்த ஒரு நண்பர் என்னிடம் ஆன்மிகத்தை பற்றி பேசி கொண்டிருந்தார்.அவர் கேட்ட ஒரு கேள்வி " கடவுள் ஏன் கொடுக்க வேண்டும் ? ஏன் அவனே எடுத்து கொள்ள வேண்டும் ? " உண்மை தானே !


நான் என் விவரங்களுக்கு கடவுளை சொல்லவில்லை , என் செயல்களுக்கு நான் தான் காரணம் .அதற்கு மறுப்பு கிடையாது.


என்னுடன் மேலோடி கொண்டிருந்த எண்ணம் "எங்கே செல்கிறோம் என்ற அந்த எண்ணம்." ஒன்றுமே புலப்படாத ஒரு வழியில் கூடமாக இடித்து கொண்டு செல்ல குமட்டி கொண்டு வருகிறது.என்னை தேடுகிறேனா அல்ல எனக்கான உறவை தேடுகிறேனா அல்ல எனக்காக தேடுகிறேனா ? தெரியாமல் விடை தேடுவது என் தேடலா ?


சொல்லடி சிவசக்தி நிலசுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

അക്ഷര തെറ്റുകള്‍


മറവി അയി പോകുന്നു


അക്ഷങ്ങള്‍ ഇല്ലാതെ


അലയുന്ന വാക്കുകള്‍

அக்ஷர தெட்டுகள்


மறவி ஆய் போகுன்னு


அக்ஷங்கள் இல்லாத


அல்லையுன்ன வாக்குகள்



மறந்து போன

பிழைகள் எல்லாம்

கோட்பாடுகள் இல்லாமல்

திரிந்து கொண்டிருக்கின்றன .

நானும் என் நண்பன் சூரஜும் சனிக்கிழமை இரவுகள் அமர்ந்து எங்கள் வார சுமையை இறக்கி வைக்க பழைய பாடல்களையும் ,படங்களையும் ஒலிக்க வைத்து கொண்டு உலக வரலாறில் இருந்து உள்ளூர் விவகாரம் வரை பேசி கொண்டிருப்பது பழக்கம் ஆகி விட்டது.அவன் சொல்லிய ஒரு கவிதை தான் மேலே !அவனது சொந்த கவிதை என்பதால் அவன் மலையாளத்தில் கூறினான்.அதை கொஞ்சம் சிரமப்பட்டு மொழி பெயர்த்து உள்ளேன்.அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

எத்தனையோ மாதங்களாக தட்டி கழித்து கொண்டிருந்தேன்.வெகு விரைவில் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்.இந்த மன மாற்றத்திற்கு காரணம் இருக்கிறது.

சத்தியமாக இன்னும் பெண் பார்க்கவில்லை.இனிதான் பார்க்க வேண்டும் !

உண்மைக்கும் பொய்க்கும்

இடையே இருக்கும்

ஒரு நூல் இடைவெளியில்

கழிந்து கொண்டிருக்கும் பொழுதுகளுக்கு

நினைவுகள் என்பது கிடையாது !!!

நினைவுகள் எல்லாம்

உண்மையாகவோ அல்லது

பொய்யாகவோ இருக்கிறது.

நான் இப்பொழுது

அந்த இடைவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆரம்பித்த உடனே

முடிந்த போன வீட்டிற்கு

பத்தாயிரம் ருபாய் வாடகை !

மாதம் பதிமூன்றாயிரம்

இ எம் ஐ கட்டும் ,

பரந்து விரிந்த

சொந்த வீட்டிற்கு இரண்டாயிரம் வாடகை.

சில விஷயங்கள் நம்மை விட்டு மாறவும் செய்யாது மாற்றவும் முடியாது.சிறு வயது முதல் நம் இரத்தத்தில் ஊறி போன விஷயங்கள் அது.ஆனந்தம் கொடுத்த,நம்மை பாதித்த,மனதில் பதிந்த ,நம்முடன் வளர்ந்த விஷயங்கள் என எதை வேண்டும் ஆனாலும் எடுத்து கொள்ளலாம்.ஒரு முறை நம் வாழ்க்கை தடம் மாறும் பொழுது அந்த நினைவுகள் எங்கோ ஒரு இடத்தில் மறைந்து ஒளிந்து கொண்டிருக்கும்.

சொந்த ஊரில் இருந்து வெளி ஊருக்கு வந்து மாற்றம் கொள்ளும் பொழுது பல விஷயங்கள் நம் எண்ண வெளிபாடில் இருந்து மறைந்து போகலாம்.நம் வீட்டை ,சுற்றிய இடங்களை எத்தனையோ விதமாக மாறி போகலாம்.அந்த பழைய எண்ணங்கள் எல்லாம் ஒரு முறை தூண்டிவிடப்படும் பொழுது மீண்டும் துளிர்த்து எழுவது ஒரு ஆச்சரியம்.அதனுடன் சேர்ந்து பழைய கதைகளும் சேர்ந்து வரும்.

முதன் முதலில் நான் பெங்களுர் செல்லும் பொழுது தமிழ் நாட்டை பிரிந்து மிகவும் வருந்தினேன்.தமிழ் நாடு என்றால் ,தமிழ் சினிமா ,தமிழ் சாப்பாடு .ஹோசூர் நகரத்தில் எதாவது என்கொயரி வந்தால் முதல் ஆளாக நான் தான் கிளம்பி நிற்பேன்.என் மேனேஜர் அறையில் சென்று இன்று நான் ஹோசூர் செல்கிறேன் என்றவுடன் அவருக்கு தெரிந்து விடும் நான் தமிழ் நாடு எல்லையை தொடவே செல்கிறேன் என்று.அவரும் அதிகம் கண்டு கொள்ள மாட்டார் .ஹோசூர் சென்று என் வேலையை முடித்து விட்டு ஹோசூர் மீனாக்ஷி பவன் சென்று ஒரு முழு சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஒரு படம் சென்றால் தான் என் வண்டி பெங்களூர் திரும்ப ஒத்துழைக்கும் .இதில் என்ன விஷயம் என்றால் அடுகோடி தாண்டி செக்போஸ்ட் அருகே தமிழ் நாடு பதிவு வண்டிகள் தென்படும் பொழுதும் சில ஜவுளி விளம்பரங்கள் சுவற்றில் தென்படும் பொழுதும் ஒரு ஆனந்தம் தெரியும் .அது தான் மனதை கிளறி விடும் நினைவுகள்.எங்கோ ஒரு இடத்தில் அன்னியமாக வாழும் பொழுது தான் அந்த ஆனந்தங்கள் புரியும்.

நண்பர்கள் பலர் மற்ற நாடுகளில் வேலை பார்க்கும் பொழுது சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்." எதோ திரையில் தமிழ் எழுத்தை பார்க்கும் பொழுதே ஒரு வித திருப்தி " என்று .உண்மை தான் யாரும் மறுக்க முடியாது.

நெல்லை மக்கள் எல்லோருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை உண்டு என்றால் அது கண்ணை மூடி கொண்டு சொல்லி விடலாம் அது புரோட்டா தான் என்று.என் பள்ளி பருவத்தில் எனக்கு அதிகம் இருப்பது எல்லாம் நண்பர்களுடன் சென்று புரோட்டா சாப்பிட்டது தான்..

இன்று இதை பற்றி எழுத பல காரணங்கள் உண்டு.ஒன்று சென்னையில் புரோட்டா என்பது ஒரு பெரிய உணவு கிடையாது.பிரியாணிகள் அந்த இடத்தை நிரப்பி வருகின்றன.நெல்லை நகரில் இறங்கிய உடன் உங்களை வரவேற்பது புரோட்டா கடைகள் தான் .பச்சை நிறத்தில் ஒரு Tube light தென்பட்டால் அது ஒரு புரோட்டா கடை.பல விதமான புரோட்டா இருந்தாலும் நெல்லையின் ஒரே புரோட்டா அது சாதா ரொட்டி .புரோட்டா மாஸ்டர் அன்று எல்லாம் எங்கள் கண்களில் ஒரு ஹீரோ போல் தென்படுவார் .அந்த புஜங்களும் அந்த புரோட்டவை புரட்டும் அந்த காட்சிகளும் எல்லா இள வயது மாணவர்களுக்கும் ஒரு சிம்ம சொப்பனம்.இதில் எந்த வகை மிகை படுத்தலும் கிடையாது.பத்து ரூபாய் கிடைத்தால் அதை வைத்து ஐந்து புரோட்டா சாப்பிட்டால் அது அன்றைய சந்தோசம்.கூடவே ஒரு அம்பிலேட் மற்றும் பச்சை வெங்காயம் இருந்தால் சொர்க்கம்.

இன்றும் அங்கு இருக்கும் பல நண்பர்கள் தினசரி இதை தான் சாபிடுகிறார்கள்.பொதுவாக புரோட்டா என்பது பெற்றோர்களுக்கு பிடிக்காத ஒரு உணவு.அதற்கு ஒரு காரணமும் உண்டு ! தன பையன் தன சப்பட்டை விட புரோட்டாவை அதிகம் விரும்பி உண்கிறான் என்ற ஒரு எரிச்சல் என்று கூட சொல்லலாம்.ஆதங்கம் என்று சொல்ல மாட்டேன்.பல நாட்கள் வீட்டில் பெரிய சண்டைகள் எதற்க்காக வந்தது எல்லாம் நினைவில் இருக்கிறது.புரோட்டா சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினால் எதோ குற்றம் செய்தது போல் நிற்க வேண்டும்.சில சமயங்கள் வீட்டை ஏமாற்றி விட்டு புரோட்டா சாப்பிட்டு வீடு திரும்பும் பொழுது அம்மாவின் திருப்திக்காக இன்னொரு முறை வீட்டு சாப்பாடு சாப்பிட்ட காலங்களும் உண்டு.இது எல்லா வீடுகளில் நிகழும் ஒரு சாதரண விஷயம் .

பொதுவாக புரோட்டா கடைகள் மாலை வேளைகளில் தான் திறக்க படும்.சில கடைகள் மதியம் இருந்து ஆரம்பிக்கும்.காலையில் யாரும் புரோட்டா சாப்பிட மாட்டார்கள்.மதியம் புரோட்டா சாப்பிடுபவன் .மைதா மாவில் ஊறி போனவன் என்று கூட சொல்லலாம்.சில நாட்கள் புரோட்டா கடைகளில் தான் சுவாரசியங்கள் நிகழும் ,பள்ளியில் படிக்கும் பெண்ணின் தந்தை அன்று கடைக்கு வந்து புரோட்ட சாப்பிடும் பொழுது நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது,மாஸ்டர் பழகி விட்டால் கொஞ்சம் அதிகமாக சால்னா வாங்குவது,பிறந்த நாட்கள் புரோட்டா வாங்கி கொடுத்து கொண்டாடுவது ,அன்றைய மிக பெரிய ரௌடி எங்களுக்கு புரோட்டா வாங்கி தருவது என்று பல சம்பவங்கள்.சால்னா என்பது குருமா ,சேரவா என்று பல விதங்களில் அழைக்கப்படுவது உண்டு.

எது எப்படி இருந்தாலும் புரோட்டா என்பது திருநெல்வேலியில் ஒரு மதம் போன்றது.சென்னையிலோ அல்ல இடங்களில் தேடினாலும் அந்த சுவை எங்கும் தென்படாது.இன்று நெல்லை செல்லும் பொழுதெல்லாம் நான் இரவு உணவை புரோட்டா கடைகளில் தான் சாப்பிடுவேன்,என் பெற்றோர்களும் அதற்க்கு பழகி விட்டார்கள்.

அன்று சென்னையில் நான் தங்கி இருக்கும் அண்ணா நகரில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பழகிய முகம் தென்பட்டது.அவர் எங்கள் வீட்டருகே இருபத்து வருடங்கள் முன் ஒரு புரோட்டா கடை நடத்தி வந்தார்.நாள் போக்கில் அவர் கடையை மூடி சென்று விட்டார் அது தான் நினைவில் இருக்கிறது.

அவர் என்னை பார்த்த உடன் கண்டு பிடித்து விட்டார்.மனிதர் வெகுவாக மாறி போய் இருந்தார்.அவரிடம் பேசி கொண்டிருக்கும் பொழுது சிந்தாமணி சிக்னல் அருகில் ஒரு துரித உணவு கடை ஆரம்பிப்பது பற்றி பேசி கொண்டிருந்தார்.நானும் அவரிடம் ஏன் ஒரு புரோட்டா கடை ஆரம்பிக்கலாமே என்று சொல்ல ,அவரும் பலவாறாக யோசித்து மாசத் கிடைப்பது கஷ்டம் என்று பேசி கொண்டிருந்தார்.
நான் அவரிடம் சொல்லியது ஒன்று தான் " அண்ணே இங்க ஒரு கடையில நம்ம ஒரு ருசி வாராது ,அதுக்கு காரணம் இருக்கு ! ஒன்னு நம்ம ஊரு தண்ணி அப்புறம் மாஸ்டர் பக்குவம்.நீங்க மட்டும் மாஸ்டர் மட்டும் கூட்டி வந்தீங்கன்னா கலக்கலாம் " என்றேன்.அவரும் ஆம் என்றார்.

ஒரு வாரம் முன்னதாக ஒரு அழைப்பு." கார்த்தி கடை போட்டாச்சு ! மாஸ்டர் நம்ம மார்கெட்ல உள்ள ஆளு ! "

"இதோ வர்றேன் ன்னே "கிளம்பி சென்றேன் " அண்ணாச்சி புரோட்டா ஸ்டால் " கண்கள் பளிச் என்று தெரிந்தது.
அன்றில் இருந்து இன்று வரை ஆறு புரோட்டா ,சால்னா,பச்சை வெங்காயம் தான்.

அதிகம் எழுதாமல் இருந்தாலும் கொஞ்சம் வாசித்து கொண்டு இருந்தேன்.இது கிரிக்கெட் காலம் என்பதால் ,கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படும் இணையதள செய்திகள் அதிகம் வாசித்தேன்,பேக் ஐ பி எல் பிளேயர் என்ற இணையம் பெரிய பரபரப்புக்கு உள் ஆனதால் அதை ஐ பி எல் சமயத்தில் அதிகம் வாசித்து வந்தேன்.கிரிக்கெட் நமக்கு அதிகம் ஊட்ட தேவை இல்லை தான்,ஆனால் கிரிக்கெட் பற்றிய கிசு கிசு எப்பொழுதும் சுவாரசியம் தான்.


இவை எல்லாம் இந்த தளத்தில் இருந்து வந்தாலும் அந்த மர்ம மனிதன் யார் என்ற முனைப்பிலே அது அதிகம் படிக்கப்பட்டது.மறைமுகமாக ப்ளாக் செய்வது ஒரு கோழைத்தனம் .ஆனால் அந்த மர்ம மனிதன் தன்னை ஐ பி எல் முடிந்த உடன் வெளிச்சத்திற்கு கொண்டு வர போவதாக அறிவித்து இருந்தான்.ஆனால் எல்லாம் ஒரு விளம்பரம் என்று மிக விரைவில் எப்பொழுது வந்து விட்டது.


இப்பொழுது அவன் உலக கோப்பை பற்றி எழுதுகிறான்.ஒரு சமயத்தில் தினமும் வசித்து வந்த நான் அவனது தொடர் பூச்சாண்டி எனக்கு எரிச்சல் தந்து விட்டது.அந்த கோழைத்தனமும் அந்த மறைமுக கிண்டலும் இனி எனக்கு சுவாரசியம் அளிக்க வில்லை.எதுவாக இருந்தாலும் மறைந்து இருந்து எழுதுவது ஒரு மிக பெரிய கோழைத்தனம்.நேற்று கூட என் நண்பர் படிக்கட்டில் இருந்து இறங்கும் பொழுது கூறினார் " Karthik Do you know Fake Ipl is back ,He is writing abt world cup "

" Yeah I came to know.This time I am not getting fooled.He is no body to tell us on Cricket,I have stopped reading him ,Reading him is Cheap !"

ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.என்னுடைய புதிய ரே பான் கண்ணாடி என் முகத்தில் அருமையாக பொருந்தி இருக்கிறது என்று யார் சொல்ல முடியும் .என் எதிரே இருக்கும் கண்ணாடியை விட.?

ஆட்டோவில் அமர்ந்தவுடன் அந்த சிறிய வட்டமான கண்ணாடியில் கஷ்டப்பட்டு முகம் பார்ப்பது என்பது எல்லோருடைய பழக்கம்.சில நேரம் அந்த கண்ணாடி மட்டும் தான் அழகாய் காட்டும் என்ற நினைப்பில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும்.

இப்பொழுதெல்லாம் சில விஷயங்கள் மறந்தும் மன்னித்தும் ஆக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது.அன்று கூட என் நண்பன் சொன்னான் " மச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ எப்படி கஷ்டப்பட போறேன்னு பார்க்க தானே போறேன்.!" இதில் பல அர்த்தம் இருக்கும் என்று கொண்டாலும் ஒரே அர்த்தம் தான் ;
கடந்த காலம் என்ற கட்டுப்பாட்டுக்குள் இருந்து வெளி வந்தால் தான் ஒரு அர்த்தம் இருக்கிறது.
அன்று பூங்காவில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தேன் ," அடேய் தனியாக இருக்கிறாய் ! முழுமையாக" அன்று கூட்டமாக இருந்த பொழுதும் தனியாக தோன்றியது ,இன்று தனியாக இருந்தாலும் ஒரு நிறைவுடன் இருக்கிறது ". என்ன முட்டாள் தனமான சிந்தனைகளா ? நீயும் உன் சிந்தனைகளும் ,நாட்கள் சிந்தித்து கொண்டு நகர்வது இல்லை. வாழ்க்கை உன்னையும் உன் சிந்தனைகளையும் தாண்டி உருமாறி செல்வதை உணரும் பொழுது உன் உணர்வுகள் எல்லாம் செத்து போய் இருக்கும்."
மறுபடியும் சிந்தனைகள்.சிந்தனை வேண்டாம் என்ற சிந்தனை.
ஏன் இப்படி யோசித்து கொண்டு ,கவிதை எழுதி கொண்டு ,கற்பனைகளை தோண்டி தோண்டி ருசி பார்த்து கொண்டு ,இயல்பான நாட்கள் என்ற விஷயம் என்ன ? எல்லாம் என்ன??? பெண் உன்னை விட்டு போய் விட்டாள் என்ற சோகமா ? சோகம் என்ன உன்னை சுகப்படுத்தி விட்டதா.திரும்பி பார்த்தால் ஐந்து வருடம் ஓடி இருக்கிறது,ஏன் எதற்கு எப்படி என்ற கணக்கு இல்லாமல் !

ஓடிய வருடங்களை மீண்டும் போய் நிறுத்தி ,இதோ இந்த இடத்தில நான் எப்படி இருந்தேன் என்ற நினைப்பு கூட நினைவில்லாமல் ,ஆனால் பயனற்று சென்று இருக்கிறது சிந்தனைகள்.

பூங்காவில் எங்கிருந்தோ ஒரு பட்டாம் பூச்சி என் அருகில் அமர்ந்தது .அருகில் இருந்து பார்த்தால் தான் அந்த ஓவியம் புரிகிறது.உண்மையில் அந்த நிறங்கள் எங்கிருந்து வருகிறது ,ஏன் எந்த வரைபடம் புரியவில்லை.அடுத்தது ஒரு பட்டாம் பூச்சி வேறு நிறத்தில்,கொஞ்சம் அருகில் சென்ற உடன் இரண்டும் பறந்து விட்டது.ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியும் முன் அடுத்த ஏன் பறந்தது என்ற கேள்வி ?

முகம் கொஞ்சம் தெளிவாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.சில நேரம் சிரித்து கொண்டு நடக்கும் பொழுது தான் தெரிகிறது சிரிக்கும் உலகம் எதை பார்த்து சிரிக்கிறது என்று.ஒரு சில நொடிகள் நின்று போய்விட்டது போல் தோன்றும் அத்தனை சிந்தனைகளும் அபத்தம் என்று தோன்றும் பொழுது சந்தோஷமாக தான் தெரிகிறது.

சில எழுத்துக்குள் என்னிடம் இருந்து தான் வந்ததா ? எதற்காக இதை பாராட்டினார்கள்.கன்றாவியாக இருக்கிறதே ? ஒருத்தன் ஒரு ரயில் பயணம் முழுவதும் லூசு மாதிரி அழுது கொண்டே வருகிறான் ? எதற்கு அவனுக்கு ஒரு கதை ,? காதல் கதையாமே அது ! நானே பிதற்றி கொண்டு பரிதாபம் தேடி இருக்கிறேன்.எல்லாம் எனக்குள் ஒரு மன்னிப்பு தோன்றும் வரை தான் .

எத்தனை முறை கதை தேடி அலைந்தாலும் சொந்த கதை மட்டும் சுகமாக வெளிப்படும் என்பது உண்மை தான்.ஒரு கட்டத்தில் அது சுவாரசியம் தான்.கழுத்து வழியில் படுத்து இருக்கும் பொழுது ஒரு நண்பன் வந்து என்னை பார்த்தான்.அவன் சொன்ன அறுதல் வார்த்தைகள் சுவற்றில் அறைந்த ஆணியை போல் இறங்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

சாதரணமாக உடல் பற்றி விசாரிக்காமல் அவன் சொன்னது " இந்த இரண்டு மாதம் உனக்கு ஒரு கொடுப்பினை தான்.உன்னை நீ அறிய ! பல வலிகள் எல்லாம் துச்சமாக தெரியும்.இவ்வளவு நாள் முக்கியமாக தெரிந்தது எல்லாம் இனி தெரியாது.உயிர் வலியை விட எதுவும் பெரியது அல்ல ! யோசி நன்றாக யோசி தனியாக அமர்ந்து அமைதியாக இரு ! சிரித்து பழகு !" அன்று அவன் சொன்னது பலவற்றை என்னால் வலியில் அதிகம் கவனிக்க முடியவில்லை ! ஆனால் இந்த மேல் கூறிய வார்த்தைகள் உண்மையாக தங்கிவிட்டது.

சீரோ டிகிரி என்ற புத்தகம் வாசித்து கொண்டிருந்தேன் ,வித்தியாசமாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கற்பனையை மீறி எழுத பட்டிருக்கும் ஒரு குப்பை .அதற்கு அப்படி ஒரு விமர்சனம் ,பப்ளிசிட்டி ! பெண் ,பெண் உறுப்பு, செக்ஸ் இதை தாண்டி புத்தகம் நகரவே இல்லை.அதை ஒரு செக்ஸ் புத்தகம் வகையிலும் சேர்க்க முடியாது.ஏன் எனில் செக்ஸ் புத்தகம் அதன் குறிக்கோள் என்ன வென்று தெளிவாக இருக்கும்.இது எந்த வகை என்று தெரியவில்லை.சம்பந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வரும் கடைசியில் செக்ஸ் செக்ஸ் .ஒவ்வொரு பக்கத்திலும் செக்ஸ் செக்ஸ்.
படிக்கும் பொழுது எரிச்சல் வந்தது.குமட்டலாக இருந்தது.இதில் இருப்பது எல்லாம் பிதற்றல் என்று தோன்றியது.ஆனால் ஒன்று பிடித்து இருந்தது.எங்கோ ஏதோ என்று நகரும் அந்த மேதாவித்தனமான ஒரு போலி தனம் பிடித்து இருந்தது.
இந்த போலி தனத்தில் திளைத்து கொண்டு தான் நாட்கள் எல்லாம் வீணாகி விட்டதா ,சில வலிகள் செக்ஸ் என்ற ஒரு மறைமுகமான ஒரு உணர்வில் அடங்கிவிடுகிறதா என்று கூட தோன்றியது.
தோன்றியவரை நல்லது என்று கூட தெரிகிறது.

ஷோபனா ரவி முதல் இன்றைய அர்னாப் வரை நான் பேசி கேட்ட ஒரு வார்த்தை தமிழ் ஈழம் .சில நேரம் யோசித்து பார்த்தது உண்டு என்ன தான் வேண்டும் இவர்களுக்கு என்று.இதன் அர்த்தம் தெரியாமல் உளறிய நாட்கள் என்று சொல்லலாம்.

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையும் ,தமிழ் இன உரிமை மீறலும் எனக்கு தெரிய ஒரு வகையில் புரிய ஆரம்பித்தது என் நண்பன் மூலம்.நாங்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் பொழுது எட்டாம் வகுப்பில் மிக தடிமனாக ஒரு மாணவன் வந்து சேர்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.அவனது ஆங்கிலமும் அவனது தமிழ் உச்சரிப்பும் வித்தியாசமாக இருந்தது.அவன் நடவடிக்கைகள் மிக சதுவனதாக இருந்தன.பிறகு தான் அறிந்தோம் அவன் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து இங்கே படிக்க வந்துள்ளான் என்று.
அவனிடம் நண்பனாக எனக்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை.அந்த நட்பு இன்று வரை தொடர்வது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது.தமிழ் பற்றி அவன் அதிகம் ஆர்வம் இல்லாவிட்டலும் ஈழம் என்ற கோட்பாட்டின் மீதும் தமிழ் நாட்டின் அதன் அசைவுகளை பற்றியும் அவன் நன்றாக அறிந்து வைத்து இருந்தான்.
உண்மையாக ஈழம் பற்றிய கருத்துகளையும் அதன் தேவையையும் சில நாட்கள் முன்னதாக நான் அவன் குடும்பத்துடன் கதைத்துக்கொண்டிருந்தேன் .அவர்கள் தமிழும் அவர்கள் கோபமும் சில வகையில் நியாயம் என்று பட்டாலும் அதன் வரலாற்றை படிக்க வேடும் என்ற தூண்டுதல் எனக்கு இருந்தது.
ஈழம் என்றால் என்ன,தமிழ் இனம் ஏன் அங்கே உருவானது ,அங்கே அவர்கள் நிலைப்பாடு எப்படி இருந்து ஏன் இப்படி ஆனது என்பதை பற்றி படிக்கவேண்டும் என்று தோன்றியது.
பிரபாகரன் யார் என்று தெரியாமலே நாம் அவனை ஒரு தீவிரவாதி என்று கொள்கிறோம்.உண்மையில் சொல்ல போனால் ஒரு நாள் குமுதம் புத்தகத்தை தூக்கம் வராமல் புரட்டி கொண்டிருந்தேன்.அப்பொழுது அதில் வந்த ஒரு வாக்கியம் மனதை வாட்டி எடுத்து விட்டது." இன்று இதை நீங்கள் படிக்கும் பொழுது தூக்கத்தின் பாதியிலோ ,சொந்தங்களை காண பயணத்திலோ அல்ல வேறு சில ஓய்வு நேரத்திலோ இருப்பீர்கள் ,ஆனால இந்த நேரத்தில் அந்த மனிதனும் அவனை சார்ந்தவர்களும் மட்டும் இனத்தை பாதுகாக்க போராடி கொண்டிருப்பார்கள்."
இதில் மேலே யாரை பற்றி கூறினார்கள் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை . இந்த ஜனநாயக நாட்டில் ஒரு புத்தகம் படிக்க நான் சிரமப்பட்டது இந்த ஒரு வாரமாக தான் .நான் படித்து கொண்டிருந்த புத்தகம் பிரபாகரனின் வாழ்க்கை.அதை அடுத்த நாள் முதல் அட்டை போட்டு படிக்க ஆரம்பித்து விட்டேன்.
உண்மையில் கேட்கிறேன், வெளி மாநிலத்திலோ ,அல்ல வெளி நாட்டிலோ தமிழ் பேசும் ஒருவரை நாம் கண்டால் நம் மனம் எப்படி சந்தோசம் கொள்கிறது?.நமக்கு தெரியாத ஒரு இடத்தில அவர் தெரியாதவராக இருந்தாலும் அந்த மொழி நம்மை இணைத்து வைப்பது எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.
இதற்கு காரணம் இருக்கிறது மொழி என்னும் ஒரு விஷயம் ரத்தத்தில் கலந்து இருக்கும் விஷயம்.அதே தமிழ் மொழி பேசும் மனிதர்கள் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தங்கள் உரிமைகளையும்,உறவுகளையும் ,உணர்வுகளையும் ,உயிரையும் இழந்து தவிக்கும் பொழுது மனிதனாக பிறந்த எவனுக்கும் கொஞ்சம் உரைக்க வேண்டும்.
இதில் நான் எழுதியோ அல்ல பேசியோ ஒன்றும் நடக்க முடியாது என்று தெரிந்து தான் இதை எழுதுறேன்.அரசியல் ஆக்கி ,உண்ணாவிரதம் இருந்து ,எல்லாம் செய்து இதோ இவன் சொல்ல வந்து விட்டான் என்று எண்ண வேண்டாம்.
உண்மையில் ஈழம் நாம் கருத்திற் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.என் தந்தையுடன் இன்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரிடம் தேர்தலை பற்றி கருத்தை கேட்டேன்.எதோ நடுவில் அவர் " எதற்காகவும் இல்லை இந்த முறை முப்பது வருடம் மனம் தளராமல் போராடி கொண்டிருக்கும் அந்த மாவீரன் சார்பாக பேசும் கூட்டதிற்க்காக தான் என் ஆதரவு " இதில் எந்த கட்சி என்று ஆராய வேண்டாம்.
ஆனால் படித்தவர்கள் ஈழத்தை கவனிக்கிறார்கள்,ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.செய்ய முடிந்தவர்கள் இன்று அதை வைத்து கபட நாடகம் ஆடுகிறார்கள்.சில நேரம் கோபம் வருகிறது.சில நேரம் இது நமக்கு மீறிய செயல் என்று கூட தோன்றுகிறது.
முத்துகுமரன் தீக்குழித்த இடத்தில இருந்து நூறடி தள்ளி தான் என் அலுவலகம் இருக்கிறது.அன்று அதை அவர் செய்யும் பொழுது என் மனம் ஏன் என்ற கேள்வியை தவிர எதுவும் கேட்க தோன்றவில்லை.ஆனால் இன்று ஏன் நண்பனுடனும் சில இலங்கை நண்பர்களுடனும் பேசிய பிறகு அதன் கோபம் புரிகிறது.
தமிழின் தூய்மையான வடிவம் அழிவின் பிடியில் இருப்பது வருந்த தக்க விஷயம் மட்டும் அல்ல ,வெட்கப்பட வேண்டிய விஷயம்.
ஈழப் போராட்டமும் அறப்போராட்டத்தில் தான் ஆரம்பித்தது என்பதை நம்ப முடிகிறதா ? செல்வநாயகம் ,அமிர்தலிங்கம் என்று பலர் ஆரம்பித்து குட்டிமணி,திலீபன் ,பிரபாகரன்,என்று பலர் போராடிய போராடிக்கொண்டிருக்கும் அந்த வரலாறு நெஞ்சை உலுக்கும் வரலாறு.

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுத்துக்களை படித்து கொண்டிருக்கிறேன்.என் நண்பன் சூரஜ் சொல்லி தான் படிக்க ஆரம்பித்தேன்.மருத்துவமனையில் இருக்கும் பொழுது என்னிடம் இருந்த இளம் பருவத்து காதலி என்ற புத்தகத்தில் ஆரம்பித்தேன்.

குணம் ஆகி கொண்டிருந்த பொழுது என் நண்பனை சில புத்தகங்கள் வாங்கி வர சொன்னேன்.மதில்கள் என்ற புத்தகம் அடுத்தது.உண்மையில் சொன்னால் உணர்வுகள் எவ்வளவு விதமாக வெளிப்படலாம் என்பதற்கு அவரது எழுத்துக்கள் சான்று.

நான் வேண்டி கொள்வதெல்லாம் அவரது எழுத்துக்களை கண்டிப்பாக நண்பர்கள் படிக்க வேண்டும்.நான் கூறிய இரண்டு புத்தகங்களும் காதலையும் அதை சார்ந்த உணர்வை பற்றியது.அதிகம் இல்லை நூறு பக்கம் தான் .ஆனால் இரண்டு புத்தகங்களும் என்னை கொஞ்சம் அசைத்து விட்டது என்று சொல்லவேண்டும்.
புத்தகம் கிடைக்கும் இடம்.
ஹிக்கின் போதம்ஸ் சென்னை.

இந்த வாரம் ஆனந்த விகடன் படித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வாக்கியம் படிக்க வெட்கமாகவும் இருந்தது அதே நேரம் அது எவ்வளவு உண்மையாகவும் பட்டது.இங்கு அது வெறும் அரசியல் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை என்பது நடந்த பல விஷயங்களில் தெரிந்தது.அந்த வாக்கியம் ஈழத் தமிழ் மக்களை பற்றியது.
"கடலுக்கு அடுத்த பக்கத்தில் எட்டுக்கோடித் தமிழ் மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்கிறார்கள்"

புது இடம் , புது வீட்டிற்கு மாறி இருக்கிறேன்,பல புதிய மனிதர்கள்,பல கட்டுபாடுகள் . எல்லாம் சரியாக பழக ஒரு மாதம் எடுத்து ஆகி விட்டது.அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நகர்ந்து வருகிறேன்.கம்ப்யுட்டர் முன் அமர வேண்டிய கட்டாயம் .எழுத இருக்கிறது.இனி தொடர்ந்து எழுதுவேன்.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ! மிக பெரிய பெருமூச்சு இப்படி தானே எழுத வேண்டும்.

துவண்டு போன மனம்,

களைத்து போன உடல் ,

உடைந்த சில நம்பிக்கைகள்,

மிக்க கொடூரனமான வலிகள்,

அழ கூட முடியாத வயது

தூங்க முடியாத விழிகள் .

நம்பிக்கை சொல்லும் மருந்துகள் ,

ஆனால் கலையாத கனவுகள்

அது தான் இந்த மனிதன் என்று எனக்கு நானே சொல்லிகொள்கிறேன் .


இத்தனை ஆண்டுகள் நான் ஒரு தலைவலிக்கு கூட மருத்துவமனைக்கு ஒதுங்கியது கிடையாது. காய்ச்சலோ அல்ல வேறு பிணியோ எனக்கு கஷ்டப்படுதியாதாக நினைவில் இல்லவே இல்லை .ஆரோக்கியம் எனக்கு இருந்தது .ஒரு சில மாதங்களாக என்னால் தொடர்ந்து எழுத முடியாத நிலைமை இருந்ததற்கு காரணம் இருந்தது.நான் பணியை முடித்து வந்து பத்து மணிக்கு மேல் இரவு இரண்டு மூன்று மணி வரை எல்லாம் தொடர்ந்து எழுதிய மாதங்கள் உண்டு.


என் மனம் எழுத்தில் சுகபட்டு கொண்டிருந்தது ஆனால் என் கழுத்து சுகப்பட வில்லை என்பது சென்ற மாதம் தான் தெரிந்தது.முதுகு வலி கொஞ்சம் பாடாய் படுத்தி வந்தது.வலியை ஒரு மூன்று மாதம் தாங்கி வந்தேன் என்று கூட சொல்லலாம்.ஆனால் எல்லாம் மீறிய செயலாக இரண்டு வாரங்களுக்கு முன் கழுத்தின் ஒரு டிஸ்க் வெளியே வந்து என் வலது கை நரம்புகளை செயல் இழக்க செய்து கொள்ள ஆரம்பித்தன.அப்பொழுது தான் வலி என்ன என்று தெரிய ஆரம்பித்தது.மூன்று நாட்களில் படுத்த படுக்கை ஆகி போன சோகம்.படுக்க கூட முடியாத நிலை.மருத்துவர்களின் உடனடி தீர்வு அறுவை சிகிச்சை .


அந்த நாள் குறிக்க பட்டும் அது வரை வலியை பொறுக்க முடியாமல் தூக்க மாத்திரை யும் வலி நிவாரணியும் ஆறுதல் சொல்ல முடியாமல் இருந்த நிலை.மருத்துவமனையில் வாழ்நாளில் முதல் முறை சேர்க்க பட்டேன்.அந்த வலியிலும் எதாவது தேடி கொண்டிருப்பதை போல் விழித்து இருந்தேன்.இரண்டு நாள் முன்னதாகவே அறுவை சிகிச்சை ,அறிந்தவர்கள் படை சூழ பராமரிக்க பட்டேன்.இதில் விஷயம் என்ன வென்றால் கழுத்தின் நறும்புகள் உடலின் அத்தனை பகுதியையும் செயல் இழக்க செய்ய கூடிய திறன் கொண்டது .அதனால் எல்லோரும் பயந்தார்கள் ,எனக்கு அன்றைய பொழுதில் அந்த நரக வலியில் இருந்து வெளியே வரவேண்டும்.


Neuro Surgeon நம்பிக்கை கொடுத்தார் என்று சொல்லவேண்டும்.எல்லாம் முடிந்தது. மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை.அடுத்த நிமிடம் என் வலி இல்லை. நான் குணம் பெற்று கொண்டிருந்தேன்.வேறு சில வந்து சேர்ந்தன . ஆனால் அந்த சிகிச்சையால் பல பல கட்டுபாடுகள் பல எச்சரிக்கைகள் .பல சோர்வுகள்.இன்று நான் சுகம் தான் ,ஆனால் அந்த நம்பிக்கை இன்று இருக்கிறதா என்று எனக்குள் கேள்வி கேட்டு கொண்டே ஆஸ்பத்திரியில் பத்து நாள் கழித்தேன்.என் தந்தையுடன் பல வருடங்கள் கழித்து நேரம் செலவிட முடிந்தது.என் இயலாமை அவர் அன்பாக வெளிப்பட்ட நாட்கள்.


பல நல்ல இதயங்கள் வந்து ஆறுதல் தந்தன.சொற்ப நாட்களில் நான் துவண்டு போய் விட்டேன்.அந்த உற்சாகம் குறைந்து போனது என்று சொல்லலாம்.நான் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற வார்த்தை என்னை பாடாய் படுத்தியது.அதற்கு காரணம் இருந்தது.கழுத்தில் காலர் ,இடுப்பில் தையல் ,கழுத்தில் தையல் எனக்கே என்னை சுமக்க கடினமாக இருந்தது.உலகம் முழுவதும் எதோ வேளையில் இருக்கும் பொழுது நான் மட்டும் இங்கு படுக்கையில்?


புத்தகங்கள், புத்தகங்கள்!!! படிக்க ஆரம்பித்தேன்.பத்து நாட்கள் தந்தையுடன் விவாதித்து கொண்டிருந்தேன்.மீண்டும் தேடல் போல் இருந்தது.ஆனால் படுத்த நிலையில்.


சென்ற வியாழன் வெளியே வந்து உலகை பார்க்கும் பொழுது கஷ்டமாக இருந்தது.கண்கள் கூசியது.நேராக திருநெல்வேலி பயணம்.இரண்டு வாரம் ஓய்வு.இந்த ஓய்வு காலங்கள் பல நேரத்தை தந்து தந்து இருக்கின்றன.அது தன் இந்த மீண்ட குறிப்புகள்.


தொடரும்


மீண்டும் பழைய வேகத்தில் எழுத முடியாவிட்டாலும் ,குறிப்பு எடுத்து கொண்டிருக்கிறேன்.பின்னாளில் எழுத.

இந்த பாடல் மிகவும் நியாயமாக படுகிறது.மனதை வாசித்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.மனதை வருடுகிறது.

http://www.youtube.com/watch?v=ubtER-ECMwg&feature=related

So close, no matter how far

Couldn't be much more from the heart

Forever trusting who we are

No, nothing else matters

ஒரு தொடர்பற்ற தொலைவில் இருப்பது போல் உணர்கிறேன்,யாரையும் காணாமல் எதுவும் பேசி கொள்ளாமல் மனதுக்குள் எதையும் போட்டு அசை போட்டு கொள்ளாமல் இருப்பது போல் வாழ்ந்து எனக்கு பழக்கம் இல்லை தான்.ஆனால் அது தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை என் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.நன்றாக செல்லும் எல்லாம் ஒரு வகையில் முடிய வேண்டும் என்பது ஒரு விதத்தில் உண்மை தான்.

தனிமை முடிந்தது என்று சொல்லலாம் .அதற்கு காரணம் அடுக்கி கொண்டும் போகலாம்.ஆனால் நான் பதிவுகள் கூட போட முடியாமல் திணறி இருக்கிறேன்.நேரம் இல்லை என்று சொல்ல முடியாது .ஆனால் ஒரு வித உணர்வு என்னை தின்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.எதை பற்றி எழுதலாம் என்ற பசி என்னை தேட வைத்து கொண்டிருந்தது இவ்வளவு நாளும். உண்மை என்னவென்றால் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கதையை தேடி இருக்கிறேன்.இன்று ஏன் என்னால் முடியவில்லை ?

ஒரு வித உணர்வு என்று சொல்வது ,இயலாமை என்று கூட சொல்லலாம்.உருப்படியாக செய்ய முடியவில்லை என்ற எண்ணம் இல்லை.அதற்கு அவசியமும் இல்லை.ஏன் என்றால் நான் உருபடியாக எதுவும் செய்யவில்லை என்று எனக்கு தீர்மானம் ஆகி போன ஒரு விஷயம்.இதில் தோன்றும் இயலாமை என் தேக்க நிலையை பற்றி சொல்கிறேன்.

என் கனவுகளை நான் துரத்த தவறிவிட்டேனா என்று தெரியவில்லை.ஆனால் ஒன்று தெளிவாக தெரிகிறது.நான் இன்று செய்து கொண்டிருக்கும் வேலை எனக்கு உரித்தானது இல்லை .வேறு வகையில் சொல்லவேண்டும் என்றால் நான் இதை செய்ய வந்தவன் இல்லை.என் களம் வேறு என்று தெரிகிறது.ஆனால் என் இடர்களும் ,என் தயக்கங்களும் நியாயமாக தோன்றுவதால் என்னால் அதை விட்டு மீண்டு வரவும் முடியவில்லை.கட்டாயங்களை மிதித்து கனவுகளை மதிக்கும் பக்குவமோ அல்ல தைரியம் எனக்கு இன்னும் வரவில்லை என்று தோன்றுகிறது.அதனாலையே என்னால் புத்தகம் வசிக்க முடியவில்லை,அழகான பெண் என்னிடம் பேசி கொண்டிருக்கும் பொழுது என் எண்ணம் எதையோ யோசித்து கொண்டிருக்கிறது . " கார்த்திக் நீ எதையோ யோசிச்சிட்டு இருக்க ? " என்ற வார்த்தை நான் தினமும் கேட்கும் ஒரு விஷயமாக ஆகி விட்டது.

எதை யோசிக்கிறேன் என்றும் தெரியவில்லை,கருமம் ஆனால் பாடாய் படுத்துகிறது என்று தான் சொல்லவேண்டும்.உத்வேகம் குறைந்து காணப்படுகிறேன்.நிலை இல்லாமல் என்று சத்தியமாக சொல்ல மாட்டேன் .சோகமாக இல்லை .எல்லாம் சாதரணமாக தான் இருக்கிறது ஆனால் ஒரு வித தேக்க நிலை எல்லாவற்றிலும் தோன்றுகிறது.சோம்பல் கொஞ்சம் தொனிக்கிறது.

ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள நேரம் பிடிக்கிறது.நான் ஏன் இப்படி ஆனேன் அல்ல நான் இப்படி தானா ? என் குட்டு வெளி பட்டு விட்டதா தெரியவில்லை.

கடவுளையும் மனிதனையும் ஒரு சேர பார்க்கும் வழக்கத்தில் இருந்து நான் மாறுபட வேண்டும் என்று நினைக்கிறேன்.கடவுள் என்ற சொல்லை நான் பயன்படுத்தும் ஒவ்வொரு தருணத்திலும் என் மனதில் தோன்றும் பயத்தை விட்டு ஒழிந்து ஒரு வித அமைதி பிறக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.கடவுள் எந்த மதத்தில் வேண்டும் ஆனாலும் இருக்கட்டும் ஆனால் கடவுளை வணங்குவது மனிதன் தானே என்ற கொள்கையில் வழிபடுபவன் நான்.கடவுளை நான் ஒரு நம்பிக்கையாக பார்ப்பவன்.இதை ஒரு அழ்ந்த சிந்தனையாக கொள்ளாமல் ஒரு சாதரண விஷயமாக எண்ணி தான் செய்கிறேன்.

மன்னிக்க வேண்டும் இந்த கடவுள் என்ற சிந்தனையை என் மனதில் இப்பொழுது கொண்டு வந்ததற்கு என் சொந்தகாரர்களை காரணம் சொல்லவேண்டும்.பெரிய அளவில் வாழ்ந்து இன்று ஒரு வித பிணைப்பு இல்லாமல் துவண்டு கொண்டிருக்கும் ஒரு குடும்பம் என்று தான் இன்று பார்க்கும் பொழுது தோன்றுகிறது.என்னவெல்லாமோ சேர்ந்து கொண்டு ஆட்டி படைக்கும் ஒருவித பொருளில் திளைத்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.காலம் எங்கோ செல்கிறது என்ற நினைப்பு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது அந்த குடும்பம் என்ற வட்டம்.

ஒரு நாள் விழித்தால் அடுத்த நாள் வேலை இருக்குமா என்ற நினைப்பில் இங்கு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அருள் வாக்கும், அருள் ஆட்டமும் மனிதனின் கடவுள் நம்பிக்கையை சிதைத்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.திடீர் என்று எழுந்து இந்த ஊர் தான் உனக்கு பூர்வீகம் இன்று முதல் இது தான் உனக்கு கடவுள் என்ற சொற்கள் எனக்கு உடன்பாடு இல்லை.என்னால் இதை எதிர்த்து போய் நிற்கவும் முடியவில்லை.இதில் கட்டுப்பட்டு போகவும் முடியவில்லை.இதனால் விலகி நின்று என்ன நடக்கிறது என்று அயல் பார்வையும் வீசவும் முடியவில்லை.
கடவுள் என்ற நம்பிக்கை என்ன என்று ஆராய்ச்சி செய்தவன் அல்ல நான்.கடவுளை நான் எந்த ரூபத்தில் இருந்தாலும் வணங்கும் மனிதனும் அல்ல.மூட நம்பிக்கைகள் எல்லாம் இந்த நம்பிக்கையில் எப்படி எல்லாம் ஊறி போய் இருக்கிறது என்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.ஒவ்வொரு நாள் புதிது புதிதாக கதை கேட்க சொந்தக்காரன் என்பதை தாண்டி எரிச்சல் வருகிறது.
எத்தனையோ நாள் நான் கடவுளே என்று அழைத்திருக்கிறேன்.அன்று நான் எந்த கடவுளை அழைத்தேன் என்று நினைவை புரட்டினால் சத்தியமாக நினைவில் இல்லை.எனில் அன்று நான் முருகனையோ அல்ல அல்லாவையோ யாரை வேண்டும் என்று கொண்டேன் என்று தெரியாது.ஆனால் ஒரு நல்ல ஆன்மாவிடம் நான் முறை இட்டேன்.அந்த ஆன்மாவை நான் கடவுள் என்று மதிக்கிறேன்.வணங்குகிறேன்.
நல்ல மனிதம் ,நல்ல ஆன்மா .நல்ல ஆன்மா மஹாத்மா இது தான் என் வழிபாடு,என் கடவுள் இதில் முரண்பட நான் விரும்பவில்லை.நான் இந்த மூன்று வருடங்களாக ஒரு வித நம்பிக்கையில் ஆன்மாவிடம் வேண்டுகிறேன்.விரதங்களும் ,பழக்கங்களும் நம்மை நாமே ஒரு வித சுய பரிசோதனைக்கு ஆட்படுத்தி கொள்ளும் ஒரு நல்ல பழக்கம்.அதை தான் உண்மையான வழிபாடும் சொல்லித்தந்தது.இன்று இருக்கும் கட்டுபாடுகளும் சில வழிமுறைகளும் எனக்கு பயமுறுத்துகிறது.
உண்மை பற்றி அறியாமல் பேசி இருக்கலாம் அல்ல தெரிந்தே கூட இப்படி எழுதி இருக்கலாம்.ஆனால் எனக்கு தேவை இன்று ஒரு நல்ல ஆன்மா அது எனக்கு தோன்றினாலும் அது கடவுள் தான்.அன்பு என்ற வார்த்தைக்குள் அடங்கும் ஒவ்வொரு விஷமும் அதன் போதனைகள் தான்.

இந்த விழிப்பு கொஞ்சம் கனமாக இருக்கிறது ,காரணங்கள் தெரியவில்லை.ஆனால் தெளிவாக இருக்கிறது. பல விடைகள் தேட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் பல நாள் தேடி துரத்தி கொண்டிருக்கும் கேள்விகள் எல்லாம் எங்கோ தூரத்தில் நின்று முகம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது. கனமாக இருந்தால் தெளிவாக இருக்க கூடாது என்று பொருள் இல்லையே .ஆனால் என்னால் என் எண்ணங்களை ஒரு சேர கொண்டு வர முடியவில்லை.நேரம் எங்கோ சென்று இருக்கிறது என்று தெரிகிறது ஆனால் எங்கே என்று தெரியவில்லை. இதோ நான் முழித்து விட்டேன் .

இன்னும் ஒரு காலை என்று நினைக்க முடியாமல் அது என்னை வாட்டி எடுக்கிறது அதற்கு என்னிடம் எந்த காரணமும் தேட முடியாத நிலையில் காற்று வீசி கொண்டிருக்கிறது..இது என்ன விதமான காலை என்று எனக்கு பரிச்சயம் இல்லை.அதை பார்க்க கூட முடியாமல் நான் சோம்பலாக தெரிகிறேன் ,என்னை பார்க்க கூட விருப்பம் இல்லாமல் காலை வேளை அழகாய் தோன்றுகிறதாம். காலையின் அழகை நான் அதிகம் ருசித்தது இல்லை. ஆனால் சில நேரத்தில் அது உண்மை என்று தெரிகிறது.


காலை எழுந்து குளித்துவிட்டு நான் கடவுள் முன் நிற்பது ஒரு வழக்கமான செயல் அல்ல ! சில நாட்கள் அப்படி நிகழும் .அது தான் அன்றும் நடந்தது .நான் எழுந்து கிளம்பிவிட்டேன் .தெளிவாக தெரிகிற வானம் என்னை எந்த விதத்திலும் யோசிக்க வைக்க வில்லை.அலுவலகத்திற்கு இன்னும் அரை மணி நேரம் பறக்க வேண்டி இருக்கிறது.காலை கொஞ்சம் சீகிரமாக கிளம்பிவிட்டோமா என்று நினைக்கிறேன்.

ஒருவிதமாக எல்லாம் சாந்தமாக தெரிகிறது.என் வீட்டை நான் தான் முதலில் திறக்கிறேன்.வெளியே இருந்த நாழிதலை எடுத்து உள்ளே வீசுகிறேன்.காலை உணவருந்தி பல காலம் ஆனது போல் நினைவு.எல்லோரும் வீட்டின் உள் அடைபட்டு இருக்கிறார்களா? .சிலர் மட்டும் வெளியே வருகிறார்கள்.

இதோ

வானம் தெளிவாக இருப்பது அந்த ரோடுகளில் தெரிகிறது .ஆனால் எனக்கு ஒன்றும் பெரிய அளவில் அதில் ஆர்வம் இல்லை.பெண்கள் எல்லாம் மலர்ச்சியாக தெரிகிறார்கள்.ஆண்கள் எல்லாம் வேகமாக தெரிகிறார்கள்.அதற்கு காரணங்கள் தேட நான் முனையவில்லை.யாரோ அழைத்து போல் சிலர் திரும்பி பார்த்து கொண்டு செல்கிறார்கள்.இவர்கள் எல்லோரையும் சுற்றி பார்த்து கொண்டே நான் செல்கிறேன்.என் வாகனத்தை பார்த்து கொண்டே செல்லும் ஒரு சில பள்ளி சிறுவர்கள்.

சில பல சிக்னல் கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.என்னை துரத்தும் ஒரு ஷேர் ஆட்டோவை நான் வழி விட்டு செல்ல சொல்கிறேன்.வழி எங்கும் வாகனங்கள் நேரம் எடுத்து படை எடுத்து கொண்டிருந்தன.எனக்கு நேரம் ஆகி கொண்டிருந்தது.

இந்த சிக்னலில் தப்பித்தால் நான் சீக்கிரம் போய் சேர்ந்து விடலாம் என்று எனக்கு தெரியும்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக நேரம் ஆகி கொண்டிருக்கிறது.என் கண்ணாடி நனைந்து கொண்டிருக்கிறது.இதோ அந்த நபர் என்னை பார்க்க தன் ஹெல்மட்டை கழட்டுகிறார்.அவர் ஹெல்மட் நனைந்து இருக்கிறது.ஏன் என்று மேலே கண்ணை சுழட்டுவதற்குள் இதோ நாங்கள் எல்லோரும் நனைகிறோம்.காலம் நேரம் இல்லாமல் வரும் ஒரு விஷயத்தில் இந்த மழை எப்படி எல்லாம் முன்னே நிற்கிறது.

மழை சென்னையின் விருந்தாளி,வந்தால் வீட்டை அலங்கோல படுத்தும் ஒரு விருந்தாளி,விருப்பம் இல்லாமல் வரும் ஒரு மனிதன்.பலருக்கு கொண்டாட்டம் ,என்னை போல் வீட்டில் இருந்து அலுவலகம் செல்பவர்களுக்கு கொண்டாட்டம் இல்லாமல் ஒரு வித ஜாக்கிரதை உணர்வுடன் ரசிக்க படும் ஒரு விஷயம்.நனையாமல் அலுவலகம் செல்ல வேண்டும்,சினிமா செல்லவேண்டும்,ரயிலை பிடிக்க வேண்டும்.எல்லாம் மழை இருந்தால் நடக்க சாத்தியம் ஏது?

இதோ இந்த சிக்னலில் நகர கூட முடியாமல் நடுவில் மாடி கொண்டிருக்கிறேன்.சிக்னல் விளக்கு மூன்று நிமிடத்திற்கு ஓடி கொண்டிருக்கிறது.பக்கவாட்டில் உள்ள ரோட்டில் மக்கள் தெறிக்க சிக்னலை தாண்டி விரைகிறார்கள்.வேடிக்கை என்னவென்றால் எல்லோரும் காரில் செல்கிறார்கள்.பைக்கில் உள்ளவர்கள் மெதுவாக செல்கிறார்கள்.பாதுகாப்பு கருதி கூட இருக்கலாம்.ஆனாலும் எல்லாம் நடக்கிறது மணி பத்தை தாண்டி கொண்டிருக்கிறது.எனக்கு வேலை இருக்கிறது.

மழை என்னிடம் எதோ ஒருவித உணர்வுடன் மேலிடுவது என்னால் உணரமுடிகிறது.என்னை கட்டுகோப்பில் சிறை இட்ட சந்தோசம் போல் இருந்தது.என் அலங்காரங்கள் எல்லாம் கரைக்க பட்டுவிட்டன.எதோ நான் கரைந்து போனாலும் என்னுடை ஆடைகள் எடை கூடியது போல் தோன்றுகிறது.நனைந்த பொழுது எதற்கு நாணம் என்ற வரிகள் நினைவில் வருகிறது.வெள்ளை வெளேர் சட்டை என்ன நிலைக்கு ஆளாக போகிறது என்ற கவலை தொற்றி கொள்கிறது.என் செல்போனை எடுத்து என் பைக் பாக்கெட் இல் வைக்கிறேன்.என் பர்ஸ் பத்திரமாக உள்ளே வைக்க படுகிறது.என்னவெல்லாமோ நனையாமல் ஒளிக்க படுகின்றது.என் பையை முன்னே வைத்து என் சட்டையின் முன் பாகம் நனையாமல் இருக்க ஏதோ செய்கிறேன்.

எத்தனையோ முறை மழைக்கு பயந்து ஓடி ஒளிந்து இருக்கிறேன்.இன்று ஓடவும் முடியவில்லை,நகரவும் முடியவில்லை.இப்படி அப்படி முனைகிறேன் முடியவில்லை.இந்தியாவின் வளர்ச்சிக்கு அடையாளமாக ஒரு அயல்நாட்டு கார் கருப்பு நிறத்தில் நின்று கொண்டிருக்கிறது என்னை நகர விடாமல் !

எதை ரசிப்பது ,நனைந்து விட்டேன்,முற்றிலும் அதனையும் நனைந்து கொண்டிருக்கிறது.என் பட்டணதனமும் ,நான் ஒரு போலி மேல் தட்டு இளைஞன் என்ற நினைப்பும் நனைந்து கரைந்து கொண்டிருக்கிறது.என் அந்த பொழுதைய ஆடை ,வேலை பற்றிய கவலைகள் எல்லாம் கரைந்து இதோ என்னை அறியாமல் நான் ரசித்து கொண்டிருக்கிறேன்.

இந்த மழை ஒரு எதிர்பார்க்காத ஒரு மழை ,இது மழை காலமும் அல்ல ,நான் ரசிக்க வேண்டும் என்று பெய்கிறதா.போடா முட்டாளே உன்னை விட நான் பலமானவன் என்ற சப்தத்தில் என்னை நனைத்து விட்டது.நானும் ஒன்றி போகிறேன்.

சிக்னல் விழுகிறது.நகர மனம் வரவில்லை.மழை என் உஷ்ணத்தை குறைத்து விட்டது.எரியும் ஒரு போலி தனத்தை குளிர்வித்து விட்டது.ஆச்சரியம் நான் நனைய விரும்புகிறேன்.இந்த பாலத்தின் அடியில் செல்கிறேன்.மேலே மழை ராக் இசை போல் சப்தம் கூட்டி பெய்து கொண்டிருப்பது கேட்கிறது.அடுத்த விநாடி பாலத்தை தாண்டி வெளியே வருகிறேன்.மழையில் ஒன்றுகிறேன்.

நண்பன் ஆகி விட்டான் மழை.என் கண்ணாடி நனைந்து வழிகிறது.எனக்கு தெளிவாக தெரிய என் கண்ணாடியை துடைத்து கொள்கிறேன்.அலுவலகம் செல்ல மனம் வரவில்லை.திரும்பாமல் நேராக செல்கிறேன்.பெட்ரோல் பங்கில் கூட்டம் கூடமாக மக்கள் என்னை பைத்தியம் என்று நினைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்,நான் அசரவில்லை .காரணம் தெரியாமல் எனக்கு மௌனராகம் படத்தில் வரும் ரேவதி நினைவில் வருகிறார்.மழையின் ஆனந்தத்தை ரசிக்கிறேன்.மழையின் வேகத்தில் பயணிக்கிறேன்.மழையின் சமத்துவத்தை ஆர்பரிக்கிறேன்.பயணித்து எங்கோ வந்து இருக்கிறேன்.அவனும் நானும் மாறி மாறி தொடர்ந்து கொள்கிறோம்.கூட்டம் இல்ல்லாமல் சாலைகள் மிதக்கின்றன.

மழை நீர் தெறித்து சாலையில் விழும் பொழுது நட்சத்திர வடிவில் உருபெற்று மறைகிறது.நட்சத்திரத்தை தான் கொண்டு வருகிறதோ மழை? ஒன்று இரண்டு மரங்கள் " வருக வருக " என்ற சப்தம் கூட்டுவது போல் அதன் கீழே செல்லும் பொழுது பன்னீர் தெளிக்கும் ஒரு உணர்வு.

திரும்பி ஒரு சிக்னலில் நிற்கிறேன்.நண்பன் நேரம் ஆகிவிட்டது போல் குறைகிறேன்.சிக்னலை தாண்டுகிறேன்.காணவில்லை.கூட்டம் திடீர் என்று கூடுகிறது.மணி பதினொன்றை நெருங்கி கொண்டது.அலுவலகம் செல்லலாம் என்று திரும்பி வருகிறேன்.

அலுவலகம் வந்து அடைந்து .பைக்கை நிறுத்தி என் வெள்ளை சட்டையை பார்க்கிறேன் ,சொல்ல முடியாத ஒரு நிறத்தில் இருக்கிறது.

" என்னடா நனைஞ்சு போய்டியா ! நாங்க தப்பிச்சிட்டோம் ,என்னைக்கு முழுசும் உனக்கு கஷ்டம் தான் ,சட்டை சூப்பர் மாமு "

போலித்தனம் மீண்டும் தொற்றிகொண்டது.சட்டையை சுத்தம் செல்ல கிளம்புகிறேன்.

என் வெள்ளை சட்டையை பார்க்கிறேன்

சில நேரம் மனிதர்கள் தராத சில சுகம் சில பொருட்கள் தரும்.நான் அடிக்கடி என் தம்பியிடம் சொல்லும் ஒரு விஷயம் " உனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்தா போய் எதாவது ஷாப்பிங் பண்ணு " என்று. நான் கல்லூரி சென்ற நாள் முதல் எனக்குள் அந்த பழக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்து வந்தது.இன்று வரை அது குறைய வில்லை.


வெளியில் சென்று எதாவது நமக்கு பிடித்த ஆடையோ அல்ல எதாவது ஒரு இசை தட்டோ வாங்கினால் உண்மையில் மனம் கொஞ்சம் இளசாக ஆகும் என்பது நான் இந்த பத்து வருடத்தில் கண்டு கொண்டது.சில வருடங்களாக நான் புத்தகமும் அதிகம் வாங்கி வருகிறேன்.அதனையும் மனிதர்களின் துணையை விட அதிக அளவில் சந்தோசம் தருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


அதில் செலவு இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் அதில் ஒரு விதத்தில் நம் மனதை ரசிக்க உடன்படுத்துகிறோம் என்பது உண்மை.இந்த மாதம் எல்லா கடைகளும் தள்ளுபடி விற்பனை விளம்பரம் போட்டிருப்பது கொஞ்சம் அதிகம் செலவு வைக்கும் காரியம் தான்.இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பிராண்ட் வாங்கி முடித்த அடுத்த நாளே நமக்கு பிடித்த அடுத்த பிராண்ட் தள்ளுபடி விற்பனை ஆரம்பித்து இருக்கும்.இதை தவிர்க்க முடியாது.


சில நேரங்கள் நமக்கு பிடித்த ஆடையோ அல்ல எந்த பொருளையோ அணியும் சுகம் வருகிறது அல்லவா .அது ஏன் ? என்று யோசித்து பார்த்து உண்டா ? அதற்கு காரணம் இது தான்.நமக்கு பிடித்தவற்றை செய்யும் பொழுது நமக்கு சந்தோஷம் நேருகிறது.அது பொருட்களிலும் தான் .


இந்த ஒரு மாதத்தில் நான் வாங்கிய சில பொருட்கள் பாசில்(Fossil) கடிகாரம் ,IVth generation IPOD ,நண்பன் அசலம் வாங்கி வந்த போஸ் (Bose Headphone)மற்றும் சென்னை புத்தக கண்காட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் .

அனைவருக்கும் சொல்லி கொள்வது என்னவென்றால் ,என்னுடைய லேப்டாப் கொஞ்சம் பழுதடைந்து அதை சரி செய்ய தாமதம் ஆனதால் பதிவுகள் இட முடியாமல் போனது.நாளை முதல் பதிவுகள் ஒழுங்காக இடப்படும்.


எத்தனை பேருக்கு அரட்டை அடிக்கவோ அல்ல ஒரு மாலை பொழுதை அமைதியாக கழிக்க காபி ஷாப் போதும் பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை.இன்று நான் பார்த்து விட்டேன் ஒரு பெண்ணும் ஆணும் சந்திக்க ஒரு இடம் என்று இதை சொல்கிறார்கள்.உண்மையில் நீங்கள் காபி ஷாப்பில் பல தரப்பட்ட மக்களை அவர்கள் வேலைகளை தங்கள் உலகத்தில் செய்ய முடியாமல் இங்கு செய்து கொண்டிருப்பதை பார்க்கலாம்



நுங்கம்பாக்கம் பாரிஸ்டா சென்றால் அங்கே இயக்குனர் கதிரையும்,இசை அமைப்பாளர் ரகுமான்,ஹரிஸ் ஜெயராஜ் ,நடிகர் ரகுமான்,பரத்,பல எழுத்தாளர்களை பார்க்கலாம்.பல ஓவியர்களை சந்திக்கலாம்.அவர்கள் எல்லாம் அவரவர் சௌகரியத்துக்கு வந்து செல்வார்கள்.முக்கியமான விஷயம் அவர்களை யாரும் அங்கு ஒரு பிரபலமாக பார்க்க மாட்டர்கள் என்றதால் அவர்கள் அங்கு வந்து செல்வார்கள்.





சென்னையில் காபி ஷாப் கலாச்சாரம் என்பது மிக பழமை வாய்ந்தது என்பது எனக்கு " என் பெயர் ராமசேஷன் " புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் பொழுது தெரிந்தது.ஆச்சரியமாகவும் இருந்தது .எழுபதுகளில் காபி குடிக்க செல்லாமல் பேசுவதற்க்காக காபி குடிப்பதை நம் மக்கள் வழக்கத்தில் வைத்து இருந்தார்கள் என்பது ஒரு ஆச்சர்யம்.தமிழ் நாடு Conservative என்ற கூற்றில் இது அடங்காது என்று எனக்கு தெரியும்.



இந்த தலைப்பை பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கும் பொழுது சில பல எண்ணங்களை சிதற விட்டு கொண்டு தான் எழுதுகிறேன் என்று சொல்லவேண்டும்.காபி குடிக்க அறுபது ரூபாய் கொடுக்க வேண்டுமா என்று நினைத்த காலங்கள் உண்டு.ஆனந்த விகடனில் முதன் முதலில் காபி டே பற்றி ஒரு கட்டுரை வந்த பொழுது நான் கல்லூரியில் அதை படித்தேன் என்று நினைக்கிறேன்.பிறகு நாளடைவில் பல மாற்றங்களை காபி ஷாப் கள் பெற்று இருந்த பொழுது நான் என் கல்லூரி படிப்பை முடித்து கொண்டிருந்தேன்.



சென்னைக்கு நான் வந்து சேர்ந்த பொழுது அதிகளவில் காபி ஷாப்கள் இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை.பீஜா கடைகள் அதிகம் முளைத்து கொண்டிருந்தன .இன்று திரும்பும் இடங்கள் எல்லாம் காபி ஷாப்புகள்.நான் சொல்ல வருவதை விட்டு விட்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.



தனிமை வேளைகளிலும் சரி நட்பு வட்டாரத்திலும் சரி எதாவது லயித்து போய் இருக்கும் பொழுதும் சரி எனக்கு தோன்றும் ஒரு இடம் இந்த காபி ஷாப் கள்.என் நண்பன் ஒருவன் இதை மேற்கத்திய கலாச்சாரத்தின் மோகம் என்று சொல்லுவான்.நான் ஒத்துகொள்கிறேன்.ஆனால் இன்று இந்த இடங்களில் கிடைக்கும் அமைதியும் அதன் ஆழமும் நகர வாழ்கையில் எங்கும் கிடைப்பது இல்லை என்பது என் கருத்து.



மின்னலே படத்தில் ரீமா சென்னை மாதவன் ஒரு பூங்காவிற்கு அழைத்து செல்லும் இடம் சிலருக்கு நினைவில் இருக்கலாம்.அந்த இடம் சென்னையில் இருக்குமா என்று சிலர் சந்தேகம் கூட இல்லாமல் அதை ஒதுக்கி தள்ளி இருக்கலாம்.உண்மை அந்த இடம் போன்று ஒரு இடம் சென்னையில் இருக்கிறது.அது ஒரு காபி ஷாப் என்று சொன்னால் நம்புவார்களா ? நானும் என் நண்பர் பரத் அவர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து காபி ஷாப் என்று இருந்தோம்.



அந்த அனுபவம் பற்றி ஒரு சில கருத்துக்கள்.


நீங்கள் யாரையாவது காதலித்து கொண்டிருந்தால் அந்த காதலை சொல்ல ஒரு நேரம் தேடி கொண்டிருந்தால்?


நீங்கள் நினைப்பது சரியா தவறா என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் பொழுது ?



அமைதியை எப்படி தேடுவுது என்று குழம்பி இருக்கும் பொழுது அமைதி வேண்டும் என்று நினைத்தால்.


மிக மிக முக்கியமாக ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்தால்.நல்ல இசை கேட்க வேண்டும் என்று நினைத்தால்?




அமெதிஸ்த் தேடி செல்லவேண்டும்.அது ஒரு காபி ஷாப் என்ற தோற்றத்தை உடைத்து அது ஒரு உலகம் என்று சொல்ல வேண்டும்.பரந்து விரிந்து காணப்படும் அந்த இடத்தில் காபி அருந்துவது என்பது ஒரு சம்பிரதாயம் என்று கொள்ளலாம்.ஆனால் அங்கே இருக்கும் ஓர் நித்திய அமைதியையும் அந்த இயற்கையும் ஒரு முறை உங்களை வேறு உலகத்திற்கு அழைத்து சென்று விடும் என்று சத்தியமாக சொல்லுவேன்.அமைதி என்பதை விட அது ஒரு உண்மை அழகு என்று கூட சொல்லலாம்.




நம்மை மறந்து நம் மனம் எதையோ யோசிப்பதை நாம் மறுக்க முடியாது.நான் ஒரு காலத்தில் காதலித்த பெண்ணை இந்த இடத்திற்கு அழைத்து வந்தது கிடையாது.எந்த பெண்ணையும் இந்த இடத்திற்கு அழைத்து போனது கிடையாது .இது ஒரு பெண்ணுடன் இருப்பதை விட நம் தனிமையை அமைதியாக அலச ஒரு ஆனந்தமான ஒரு இடம்.ஒரு Cafe Lathe வை ஆர்டர் செய்து விட்டு ஒரு பொழுது முழுவதும் அமர்ந்து கொள்ளலாம்.
இந்த இடம் எங்கு இருக்கிறது என்று பலர் என்னிடம் சொன்னது கிடையாது.நானும் இதை பரப்பி பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை.மதி பரத் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இந்த இடம் ஒரு ஆடம்பரம் அல்ல ஒரு ஆனந்தம்.மறுக்க முடியாத ஒரு அமைதி ,ஒரு முறை சென்று வந்தால் நான் சொல்வது உண்மை என்று சொல்வீர்கள்.

பல விஷயங்கள் நமக்கு சினிமாதான் சொல்லிதர வேண்டி இருக்கிறது.நேற்று பாலாவின் நான் கடவுள் பாடல் வெளியீடு நிகழ்ச்சியில் அனைவரின் கண்களை பறித்த ஒரு விஷயம் அஹம் ப்ரஹ்ம ஆஸ்மி என்ற வாக்கியம் .பலர் என்னிடம் இதன் அர்த்தம் என்னவென்று கேட்டு இருந்தார்கள்.நானும் பலரிடம் கேட்டு இருந்தேன்.உண்மையில் இந்த ஒரு வார்த்தையை பற்றி படிக்கும் பொழுது நேர்ந்த உணர்வுகள் மெய் சிலிர்க்க வைத்த அனுபவம் என்றே சொல்ல வேண்டும்.

ஆர்வம் இல்லாமல் நான் மூடி வைத்த ஒரு விஷயம் ஹிந்துத்துவம் .ஹிந்துத்துவத்தை சார்ந்து இருக்கும் வேதங்களையும் கருத்துகளையும் நான் தேடியது இல்லை.எனக்குள் தோன்றிய நம்பிக்கைகளுக்கு என் பிறப்பால் நேர்ந்த மதத்தை கொண்டு நான் சாயம் பூசி கொண்டு நான் ஹிந்து என்று மார் தட்டி கொள்ளவும் விரும்பவில்லை,கூனி குறுகி இருக்கவும் இல்லை.நான் பிறக்கும் பொழுது என் பெற்றோர் ஹிந்துக்கள் அதனால் நான் ஹிந்து என்று இந்த சமுதாயத்தில் ஏற்று கொள்ளப்பட்டேன்.உண்மையில் நான் யார் என்று தேடும் பொழுது நேரும் மதமே ஒருவனின் சொந்தமான அல்லது சூடி கொள்ளும் மதம்.மதம் என்ற ஒரு விஷயம் பின்பற்றுதலின் அடிபடியில்! தேவை படுபவர்களுக்கு இது பொருந்தும்.

அஹம் என்ற வார்த்தைக்கு காஷ்மிரி சைவத்தில் இருந்து வேர்கள் முளைக்கின்றன.அஹம் என்பதன் அர்த்தம் தான் ,உயரிய இருதயம் ,நான் ,என்னுள்ளே என்று பல அர்த்தங்கள் வெளிபடுகின்றன.நேற்று இரவு இதை பற்றி தேடி கொண்டிருக்கும் பொழுது இதில் தோன்றிய ஒரு சில கருத்துக்களை எங்கே பகிர்ந்து கொள்கிறேன்.அஹம் என்ற உணர்தல் கேச்சரி முத்ரா என்ற நிலையை அறிய முற்படும் பொழுது முழுமை கொல்கிறது.

கேச்சரி முத்ரா என்பது தன்னை அறியும் செயலில் அடையும் முக்தி நிலையை போன்றது.அல்லது முழுமையான நிலை என்று கொள்ளல்லாம்.ஆதிசிவன் உலகை படைக்கும் பொழுது படைத்த முதல் விஷயம் ஆன்மாவின் சக்தியான அஹம் என்ற வெளியை தான்.அண்டவெளியும் அஹம் என்ற ஒரு தன்னிலை சகதிக்குள் அடங்க வேண்டும் என்ற கோட்பாட்டின் கீழ் அமைக்க பட்டது தான் இந்த உலகம்.

அஹம் என்ற கொள்கைக்கு சார்ந்து உள்ளது தான் ப்ரித்வி தத்துவம் மற்றும் சதாசிவ தத்துவம்.முந்தையது இந்த பூமியை சார்ந்தது,பின்தையது "நான் தான் அண்டம்" என்ற கொள்கையை கொண்டது .அஹம் என்பதற்கு ஹிந்துவதில் மகா சக்தி என்றும் ,ஆதி என்றும் பல அர்த்தங்கள் உண்டு.

ப்ரஹ்மண் என்பதற்கு பிராமிணன் என்ற சிறிய ஒரு வட்டத்திற்குள் கொண்ட அர்த்தம் அல்ல இந்த வார்த்தை.ப்ரஹ்மண் என்ற வார்த்தைக்கு முடிவில்லா ,மாற்றமில்லா ,அழிவில்லா ,தன்னிலை கொண்ட சக்தி என்ற பொருளை அடக்கி இருக்கும் ஒரு மனிதத்தை தாண்டிய ஒரு மைய கரு என்று பொருள்.முடிவில்லா என்பது அறிவு,தன்னிலை,கட்டுப்பாடுகள் ,சக்திகள் ஆகியவற்றிற்கு முடிவில்லா என்று பொருள்.இந்த கொள்கைகளை அறிந்தவனை நாம் பிராமின் என்று அழைக்கிறோம்.அதனால் அந்த இரண்டு வார்த்தைக்கும் வேறுபட்ட அர்த்தங்கள் உபநிஷத்தில் சொல்லபட்டிருக்கிறது.

இப்பொழுது அஹம்+ப்ரஹமண்+ஆஸ்மி என்ற கருத்துக்களை சேர்க்கும் பொழுது நமக்கு தோன்றும் ஒருமித்த கருத்து நான் கடவுள் ! இந்த ஒரு வார்த்தை தன்னை ஒரு கடவுளாக பிரகடன படுத்தி கொள்ளும் ஒரு சக்தி.ஹிந்து உபநிஷடத்தில் மனிதனை பிரதான கடவுளாகவும் ,புனித ஆன்மாவாகவும் கொள்ள வழக்கங்கள் இருக்கிறது.அம்ருதஸ்ய புத்ரன் என்பதற்கு அர்த்தம் இதுவே .

அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற நிலையில் ஒருவன் தன் கட்டுபாடுகளை உடைத்து மனித சக்திகளுக்கு கட்டுகொல்லாமல் ஆசை துறந்து ,முக்தி நிலை பெறுகிறான் என்று அர்த்தம்.இயேசு சிலுவையில் அறைய பட்டதன் காரணம் இது தான் .

ஹிந்து வேதத்தில் சொல்லப்படும் நான்கு மந்திரங்களின் ஒன்று இந்த அஹம் ப்ரஹ்மாஸ்மி.மஹா வாக்கியங்களாக இது அறிய படுகிறது.

ப்ரஜனனம் ப்ரஹ் மண்
ப்ரஹ் மண் என்பது ஆதி சக்தி

அயம் அத்மம் ப்ரஹ்மா
சுயமே ப்ரஹ்மண்
தத் தவம் ஆஸி
நீ அது .அது என்பது உடல் ,பொருள் என்பதை தாண்டி உள்ளார்ந்த ஒரு சக்தியை முக்திநிலையை எடுத்து சொல்வது.
That is what you --Samaveda

அஹம் ப்ரஹ்மாஸ்மி
நான் ப்ரஹ் மண்
I am brahman --Yajur Veda

கீழே கொடுக்க பட்டுள்ள சில வலைபக்கங்களில் நீங்கள் சில தேடல்களை கொள்ளலாம்.
தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும் .

இந்த பகுதிக்கு வந்து வெற்று கையுடன் திரும்பிய என் நண்பர்களுக்கு !

நீண்ட பயணத்திற்கு பிறகு ஒரு நிறுத்தம் தேவை.மூண்ட கனவின் பிறகு ஒரு விழிப்பு தேவை.அழைப்புகளுக்கு ஒரு நாள் திரும்பி தான் ஆக வேண்டும்.இந்த வருடம் ஒரு பயணம் .ஒரு வருடத்தில் எதுவும் மாறாமல் இருந்தது.வாழ்க்கை சக்கரம் சுழலும் விதத்தில் நான் என் பிம்பத்தை கூட வெறுத்து கொண்டிருந்தேன்.இன்பங்களும் ,களிப்பும் போலியாக எனக்குள் தெரிந்து கொண்டிருந்தது.என்னை மீறிய ஒரு வித வயது என்னை ஆக்ரமித்து கொண்டிருந்தது.என்னை ஆர்பரித்து கொண்டிருந்த ஒவ்வொரு காலகட்டங்களும் விடை இல்லாமல் என்னை பார்த்து கொக்கரித்து கொண்டிருந்தது.

இன்று கேட்கலாம் இந்த பகுதியில் இந்த வருடத்தில் எழுதாமல் போன காலங்கள் என்று எடுத்து கொண்டால் இந்த ஒரு மாதம் மட்டுமே .எழுதாமல் போனதற்கு காரணங்கள் இல்லை.ஆனால் மாற்றங்கள் இருக்கின்றன.மாற்றங்கள் நிலையானது இல்லை என்று தெரிந்தே இந்த மாற்றத்தை ஏற்று கொண்டிருக்கிறேன்.என்னை பற்றி படித்து படித்து சலித்து போனவர்களுக்கு இந்த பகுதியில் புதியதாக நான் ஒன்றும் சொல்ல போவதில்லை.

குழப்பவில்லை .இந்த வருடம் மிக மிக தெளிவான ஒரு படிப்பினை எனக்கு.பல விஷயங்கள் எனக்குள் தெளிந்து இருக்கின்றன.சில காயங்கள் ஆறி போகும் என்று தெரிந்து இருக்கிறது.ஒரு முல்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்ற கூற்று உண்மை என்று புரிகிறது.தெரிந்தே ஒரு முள்ளை நான் கையில் எடுத்து இருக்கிறேன்.ரோஜாவை ரசிக்கும் வரை எனக்கு வலி தெரிய போவதில்லை.இந்த வருடம் அதிகமாக யோசித்து இருக்கிறேன்.அதிகமாக தேடி இருக்கிறேன்.தேடல்கள் எனக்கு வடிகாலாக அமைந்து இருந்தது.அதில் இருந்து வழிந்தது எல்லாம் எனக்குள் இருந்த ஒரு வித தேங்கிய வெற்று நிஜங்கள்.


ஒரு சில நாட்கள் என்னால் எழுத தோதாக அமையாமல் போனபோது புலம்பி இருக்கிறேன்.கண்ணீரையும் ,காணலையும் துணையாக கொண்டு நிம்மதியை தொலைத்து கொண்டிருந்தேன்.வித்தியாசமாக செய்கிறேன் என்று நினைத்து கொண்டு ஆதி காலம் முதல் மனிதன் செய்து வந்த அதையே செய்து வந்திருக்கிறேன்.எங்கெல்லாமோ இளைப்பாறி இருக்கிறேன்.எங்கும் தாகம் தீராமல் சுற்றி வந்து இருக்கிறேன்.என்னை சுற்றி இருக்கிறவர்கள் எல்லாம் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள்.அது தான் அடுத்த கட்டமா என்று கூட ஏற்று கொள்ள மனம் தயங்கி கொண்டிருந்தது.ஆனாலும் அவர்களின் தீர்மானங்கள் மேடை ஏறும் பொழுது நான் உடன் இருந்து வாழ்த்தி வந்து இருந்தேன்.வாழ்த்துக்களில் எத்தனை உண்மை இருந்ததோ அதனை ஏக்கமும் இருந்தது.அந்த ஏக்கங்கள் எல்லாம் என் சிந்தனைகளில் ஊறி கொண்டிருந்தது.என்னால் அந்த தீர்மானங்கள் எடுக்க முடியவில்லை என்று அல்ல ! அந்த தீர்மானங்கள் அவர்களுக்கு கட்டாயமாக படும்பொழுது எனக்கு ஏன் படவில்லை என்று.பல புதிய உறவுகளை அவர்கள் ஒரே நாளில் ஊரறிய உருவாக்கும் பொழுது பரவசம் இருந்தது.ஆனால் என்னால் என்னை அதே போல் ஒரு மேடையில் வைத்து பார்க்க முடியவில்லை.


நான் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு காரியமும் முட்டாள்தனமான ஒரு வித பத்தாம் பசலித்தனமாக இருந்தது.சினிமாவில் வரும் கதாபாத்திரத்தை உருவாக்கி கொண்டு நான் ஏன் அந்த தியாகி வேஷம் போட்டு கொண்டு அலைந்தேன் தெரியவில்லை.ஏன் அந்த வேட்டை நாய் வேஷம் போட்டு கொண்டு வேட்டை ஆடினேன் தெரியவில்லை.கண்கள் பார்த்த எல்லாம் மாயை என்ற கட்டாயமான மன நிலையில் தள்ளப்பட்டு கொண்டிருந்தேன் என்பதை ஒத்து கொள்ளவேண்டும்.உண்மை எதிலும் இல்லை என்பதை முழுமையாக உண்மை என்று கொண்டிருந்தேன்.


எழுதியதும் ,படித்ததும் ஒரு விதத்தில் என்னை பலவாறாக அலசி கொண்டிருந்தது என்று சொல்லவேண்டும்.மாற்றங்கள் ஒரு நாளில் நடக்கலாம் ஒரு யுகத்தில் நடக்கலாம்.பல கருத்துக்கள் எனக்குள் ஒரு வித தேக்க நிலையை மாற்றி ஒரு வித சீரான சிந்தனையை தந்து இருக்கிறது.என் செயல்களுக்கு விளைவுகளை அந்த செயல் செய்யும் முன்னவே எனக்கு தெரிகிறது.இது எவ்வளவு பெரிய மாற்றம்.என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும் என்று நம்புகிறேன்.மிக மிக அற்பமான சிந்தனைகள் அற்பமாக தெரிகிறது.


இவ்வளவையும் சொல்லிவிட்டது இதை சொல்லாமல் போனால் எப்படி ? இன்று கட்டுண்டு இருக்கிறேன்.என்னை என்னால் ரசிக்க முடிகிறது.நேரங்கள் மீதமான பொழுதுகள் போய் நேரங்களை தேடி கொண்டிருக்கிறேன்.நான் கண்காணிக்க படுகிறேன்.ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறேன் .அதிகம் அலட்டி கொள்ளாமல் ,கட்டாயமும் கால கட்டமும் இல்லாமல்
நான் ரசிக்கப் படுகிறேன். எனக்கு புதிய அத்தியாயம் எழுத படுகிறது.யாரோ என் தூக்கத்தை தட்டி எழுப்பி இருக்கிறார்கள்.தூர இருந்தாலும் நெருக்கம் மீண்டும் தெரிகிறது.


முதல் வரியில் சொன்னது போல் ,என் பயணமும், என் தூக்கமும், அழைப்புகளுக்கு திரும்பாமையும் தொடரலாம்.


ஆனால் இப்பொழுதைய நிலவரப்படி


"தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்குநின்செயல் செய்து நிறைவு பெரும் வணம்
துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை "

Dec 26, 2008

Merry Christmas

இன்று கிருஸ்துமஸ் .என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து திரும்ப வரும் பொழுது அலங்கார விளக்குகளும் ,பேக்கரி கடைகளும் .ஆலயத்தின் முன் இளைஞர்களும் நாளை கிறிஸ்துமஸ் என்பதை நினைவில் கொடுத்தார்கள்.கிறிஸ்துமஸ் ஒரு மகிழ்ச்சி ,கிறிஸ்துமஸ் ஒரு மதத்தை தாண்டி ஒரு பூரிப்பு என்பது அதை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.நான் கிறிஸ்துவன் இல்லாவிட்டலும் எனக்குள் சிறு வயது முதலே கிறிஸ்துமஸ் ஒரு வித மகிழ்ச்சி அளித்து வந்தது.அந்நாளில் என் வீட்டை சுற்றி இருந்த நண்பர்கள் வீட்டில் எல்லாம் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கும் பொழுதிருந்தே காகித நட்சத்திரம் வீட்டின் முன் தொங்க விட்டிருப்பார்கள்.

கிறிஸ்துமஸ் அவர்களுக்கு தரும் ஆனந்தம் எனக்கும் தொற்றி கொள்ளும்.நானும் என் தம்பியும் என் தந்தையை பாடாய் படுத்தி நட்சத்திரம் வாங்கி வீட்டின் முன் தொங்க விட்டு அழகு பார்போம்.எங்கள் வீட்டின் அருகில் உள்ள வீட்டில் இருந்து எல்லாம் கேக் செய்வதை முதல் நாள் சென்று ருசி பார்ப்பது ஒரு வழக்கம்.

அடுத்த நாள் காலை நாங்கள் எழும் முன்னவே கேக் எங்கள் வீட்டிற்க்கு வந்து சேர்ந்து விடும்.மதியம் பிரியாணிக்கு அழைப்பு வரும்.சந்தோஷமான உரையாடல்கள் நிகழும்.

எதோ இன்றும் நான் பார்க்கும் அந்த கிறிஸ்துமஸ் பசுமையான நினைவில் இருக்கிறது.கிறிஸ்துமஸ் பண்டிகை என்றும் ஆனந்தத்துடன் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.நானும் எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு "Merry christmas "என்று எஸ் எம் எஸ் அனுப்பி வைத்தேன்.காலை எழுந்து என் நண்பனுடன் வெளியே சென்று வந்து எதாவது கிறிஸ்துமஸ் உணவு சாப்பிடலாம் என்று ஒரு நட்சத்திர ஹோட்டலில் தஞ்சம் புகுந்தேன்.

விலையை பற்றி கவலை கொள்ளாமல் எனக்கு கிறிஸ்துமஸ் உணவை சுவைக்க செல்லலாம் என்று நினைத்த பொழுது ஏமாற்றம் மிஞ்சியது.
" Sorry sir ,we serve on booking "
இரவு இருவருக்காக ஒரு டேபிள் புக் செய்து விட்டு வந்து சேர்ந்தேன்.இப்பொழுதெல்லாம் எனக்கு நேருகிற கிறிஸ்துமஸ் பெரிய கடைகள் போடும் தள்ளுபடி விற்பனைகள் தான்.அந்த சமயத்தில் நடக்கும் Clearance sale ,எனக்கு இந்த வருடம் முடியபோகிறது என்ற எண்ணம் ,புதிய வருடம் தரும் நம்பிக்கைகள் எல்லாம் கண் முன்னே வருவது தவிர்க்க முடியாது ஆகி விடுகிறது,

எல்லோரும் மறக்க நினைக்கும் ஒரு வருடமாக ஆகி விட்டது இந்த 2008.பொருளாதாரம்.சமுதாய சீரழிவு,சட்ட ஒழுங்கு .மத அத்துமீறல்கள் .அரசியல் பூச்சாண்டிகள்,வேலை நீக்கம்,விலைவாசி .எல்லாம் நேர்ந்து விட்டது.தனி மனிதனாக எனக்கு பார்த்தால் என் புதிய வேலை தரும் புதிய கட்டுபாடுகள் புதிய வாழ்வு முறை என்று தான் சொல்ல வேண்டும்.

இரவு நேரம் கிறிஸ்துமஸ் விருந்து நல்லபடியாக ஒரு வித கவித்துவமாக சென்றது என்று தான் சொல்லவேண்டும்.உணவில் இருந்த பிடித்தம் அந்த விலையை பார்த்த உடன் குறைந்து விட்டது.ஒன்றரை மடங்கு அதிகமாக விலை கொடுக்க வேண்டி இருந்தது.

பல நாட்களுக்கு பிறகு சிறுவயது கிறிஸ்துமஸ் நினைவுகள் சில கிறிஸ்துவர்களை பார்க்கும் பொழுது தோன்றியது,
நான் சிறு வயதில் Vaccation bible study (VBS)சென்ற பொழுது படித்து நினைவில் வந்த பைபிள் வரிகள்.
"Praise be to the name of God for ever and ever; wisdom and power are his. He changes times and seasons; he sets up kings and deposes them. He gives wisdom to the wise and knowledge to the discerning. He reveals deep and hidden things; he knows what lies in darkness, and light dwells with him."Daniel 2:20-22.
என்ற நம்பிக்கையில் எனக்கு இந்த நாள் முடிந்தது.அது தானே வாழ்க்கையும்.
Merry Christmas

பாரதி 1919 இல் எழுதிய ஒரு வித்தியாசமான ஒரு பாடல் இன்றைய காலகட்டத்தில் மிக மிக தேவையாக இருக்கிறது.இந்த பாடல் என்றுமே இந்த உலகத்தில் ஒரு தேவையாக மட்டுமே நிலைத்து இருக்கும்.பாரதிக்கு பராசக்தி மீது இருந்த ஒரு நம்பிக்கை மதத்தை தாண்டிய ஒரு நம்பிக்கை.அவர் சுற்றமும் சுழலும் சுகம் பெற வேண்டியது அவளை தான்.மகாசக்தியாக அவர் பார்த்து இருந்த ஒரு நம்பிக்கை அவர் பாடல்களில் ஒரு தரிசனமாக இருந்தது.இருக்கிறது.இந்த பாடல் ஒரு நட்டுப்புறது குறவர் பாடலாக இருப்பது மேலும் வித்தியாசத்தையும் ,அழகையும் கூட்டுகிறது.என் பாரதியார்கவிதைகள் பக்கங்களில் எழுத தேடி கொண்டிருந்த பொழுது இந்த பாடல் மிகவும் ஈர்த்தது.இதற்கு ஒரு ராகம் போட்டு பாடினால் சுகமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------
குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது ;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி ,சொல்லடி ,சக்தி மாகாளீ
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுது ;செல்வம் பெருகுது
படிப்பு வளருது ,பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் ,
போவான் ,போவான் ஐயோவென்று போவான் !
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது ;தொழிலாளி வாழ்வான் ;
சாத்திரம் வளருது ;சூத்திரம் தெரியுது ;
யந்திரம் பெருகுது ;தந்திரம் வளருது;
மந்திரமெல்லாம் வளருது ,வளருது ;
சொல்லடி ,சொல்லடி,மலையாள பகவதீ
அந்தரி ;வீரி ,சண்டிகை ,சூலி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது ;
தொப்பை சுருங்குது ;சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது ;
பயந் தொலையுது ,பாவந்தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது ;
நேத்திரம் திறக்குது ,நியாயம் தெரியுது ;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது ;
வீரம் வருகுது ;மேன்மை கிடைக்குது ;
சொல்லடீ சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது ;தர்மம் பெருகுது.

நான் சென்னைக்கு திரும்ப வந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.வந்ததில் இருந்து கடற்கரை பக்கம் நான் செல்லவே இல்லை என்பது நேற்று தான் தெரிந்தது.கடல் அலைகளுக்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பது பார்த்த உடனே தெரிகிறது.நேற்று நான் சென்னையை தாண்டி பல மைல் தூரம் சென்று இருந்தேன்.பல விஷயங்களை பின்னே தள்ளி வைத்து விட்டு பல புதிய அரிதாரத்தை பூசி கொண்டு இந்த வாழ்க்கை எவ்வளவு அழகாய் செல்கிறது என்று தோன்றியது .அழகு என்பது மனதை சார்ந்து இருக்கிறது என்பது புரிகிறது.எண்ணங்கள் அலைகளை போல் எழுந்து அடங்குவதும் அது ஏதோ கரையை தொட்டு கொண்டு மீண்டும் இழுத்து கொண்டு செல்வதும் கடல் அலைகளை பார்த்தால் தான் தெரிகிறது.கடல் அலைகள் சொல்லும் கதைகளுக்கு ஆதாரம் மனிதனின் வாழ்வில் தான் தேட முடியும்.
கடலும் அதன் அலைகளும் அழகானவை என்பதை விட அவை ரகசியமானவை .கடல் ஏன் எப்படி எங்கே என்று எத்தனை கேள்விகள் கேட்டாலும் கடலும் அதன் அலைகளும் தரும் ஒரே பதில் அதன் பிரம்மாண்டம் .முன்னே நின்று பார்க்கும் பொழுது எல்லா கடலும் எல்லா அலைகளும் ஒரே அளவு தான் .

காதல் சொட்டுகிறது,சோகம் வழிகிறது,தென்றல் வீசுகிறது,தனிமை வாட்டுகிறது, கேள்விகள் விடை பெறுகின்றன ,கண்கள் ரசிக்கிறது,மனம் நனைகிறது ,உண்மை தெரிகிறது,பொய்கள் காணாமல் போகிறது, கவிதை பிறக்கிறது,வலிமை புலப்படுகிறது ,நேரம் கழிகிறது .அலைகள் முன்னே அமர்ந்தால் எல்லாம் நடக்கிறது.

என் உடன் அமர்ந்து இருந்த பெண்ணும் என்னை மறந்து கடலை ரசித்து கொண்டிருந்தது எனக்கு நிம்மதியை தந்தது.எங்களுடன் வந்து இருந்த ஒரு ஜோடி எங்கோ ஒரு தொலை தூரத்தில் தங்கள் கால்களை நனைத்து கொண்டிருந்தார்கள். அலைகள் ஓயாமல் இருக்கும் பொழுது மனதில் என்னை அறியாமல் ஒரு கவித்துவம் எழுந்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.சத்தமாக பாட தோன்றியது.திடீர் என்று அந்த பெண் என்னை திரும்ப பார்த்து சிரித்து கொண்டு அவளும் பாட ஆரம்பித்தாள். Nothings gonna change my love for you என்ற பாடல் ஆரம்பித்த பொழுது என் குரல் ஆங்கில பாடல்களுக்கு எதுவாக இருக்காது என்று தெரிந்தும் என் மனம் பாடி கொண்டிருந்தது .Ghar se Nikalthey hi என்ற பாடல் அழகாய் முடிந்தது.கடலோர கவிதைகள் பாடல்கள் அழகாய் பாடி அரங்கேற்றம் நடந்தது.

மனம் மிக மிக இளசாக இருந்தது.என் மீது சாய்ந்து இருந்த பெண் " ஏன் கார்த்திக் ஒரு உண்மைய பார்த்தாயா ? " என்று கேட்டாள் .

கடல் முன்னே நாம் அமரும் பொழுது நமக்கு முன்னே இருக்கும் உலகில் நாம் மட்டும் தான் இருக்கிறோம் .எல்லோரும் நம் பின்னே தான் இருக்கிறார்கள் .நம் உலகம் நம் முன்னே எப்படி விரிந்து இருக்கிறது ! இந்த உலகத்தில் இந்த நொடியில் யாரும் என்னை தவிர இல்லை என்ற எண்ணம் எனக்குள் எழுகிறது !" என்று ஒரு கவிதையை மிக சாதரணமாக சொல்லிவிட்டாள்.

நான் பதில் எதுவும் சொல்லாமல் அவளை ஒரு முறை பார்த்தேன். அணைத்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது ,ஆனால் அதை மீறிய ஒரு சிந்தனை அவள் சொல்லிய வார்த்தைகளால் ஏற்பட்டது.எவ்வளவு ஆழமான சிந்தனைகள் அந்த அழமான கடலில் இருந்து கிளம்பி அவள் மனதில் தோன்றி இருக்கிறது என்று நினைத்து கொண்டு ஒரு புன்னகையில் அவளை ஆமோதித்தேன்.எத்தனை முறை இந்த கடல் அலைகளை நான் பார்த்து இருப்பேன் ஆனால் ஏன் சிந்தனைகள் வேறுபடுகின்றன என்று தோன்றும் .இந்த முறை மிக அமைதியாக எண்ணங்கள் சீராக செல்வது நன்றாக இருந்தது.

கற்பனை உலகம் எதுவும் விரித்து கொள்ளாமல் உண்மையில் நடை பயில்வது புத்துணர்ச்சி தருகிறது.
கடல் அலைகள் -
கவிதைகள் -
பெண்- தனிமை -
வேறு என்ன வேண்டும்
ஒரு மாலை வேளையில் .

என் நண்பன் மதி எழில் தன் ஜிமெயில் நிலை செய்தியில் இதை எழுதி இருந்தான்.எனக்கு இந்த வார்த்தை ஒரு படத்தில் வந்ததால் இதை பற்றி என்னவென்று அர்த்தம் மட்டும் தெரிந்து வைத்து இருந்தேன்..அதை சூட்டியவர் ரோமானிய புலவர் ஹோரஸ் என்ற செய்தி மட்டும் எனக்கு தெரிந்து இருந்தது. ஹோரஸ் மாமன்னர் அகஸ்டஸ் காலத்தில் வாழ்ந்த ஒரு புலவராக அறிய படுகிறார்.இன்று நான் இந்த வார்த்தைகளை பார்த்த உடன் அதை பார்த்தவுடன் அதை பற்றி படிக்கலாம் என்று விக்கியை திறந்து பார்த்த பொழுது கொஞ்சம் படித்து வந்தேன்.

கார்பே தீயும் என்றால் எடு ,பிடுங்கு ,சேகரி என்று அர்த்தம்.ஆனால் அது வழக்கத்திற்கு வரும் பொழுது அதன் அர்த்தம் மகிழ்வாய் இரு ,கொண்டாடு ,திரட்டு.இதற்கு மிக பிரபலமான அர்த்தம் ' Seize the day "என்பதாகும்.
லத்தீன் வார்த்தை மொமண்டோ மோரி Momento Mori என்றாலும் இதன் அர்த்தத்தை சார்ந்தே வரும்.ஆனால் மொமண்டோ மோரி என்ற வார்த்தையில் நிலையான எண்ணமும் ,கடந்த காலத்தின் நடத்தைகளுக்கு சுய ஒப்புதல் மற்றும் தண்டனை பெற்று கொள்ளும் நிலையில் அமையும் ஒரு வார்த்தை."Remember that you are mortal," "Remember you will die,"
ஒரு நாளை உன் வசம் ஆக்கி கொள் என்பது ஒரு உள்ளார்ந்த அர்த்தம்.அதன் கரு அதுவே ! .ஒரு நாளை உன் வசம் ஆக்கி கொள்வது யார் கையில் என்ற விவாதத்திற்கு செல்லாமல் நான் சொல்ல வந்தது இந்த வார்த்தையை சிலரிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு முயற்சியில் எழுதி இருக்கிறேன்.

நாளை நீ இல்லை என்றாகி விட்ட நிலையில் நீ இன்றைய பொழுதை கொண்டாடு !!!!

எல்லா பத்திரிக்கைகளும் எல்லா தலைவர்களும் சொல்லும் வார்த்தைகள் நாம் ஒன்று திரண்டு நிற்க வேண்டும்.நாம் ஒன்று பட்டு இதை எதிர்க்க வேண்டும் ,இது ஒரு தேசிய இடர்பாடு, இது அரசியலுக்கு அப்பாற்ப்பட்டது என்பதை தான்.


என்ன செய்ய வேண்டும் நாம் ? மனித சங்கிலி கோர்த்து கொண்டு இந்த சென்னை மழையில் நின்று நமக்கு தெரிந்த விளம்பரத்தை செய்து கொள்ளவேண்டுமா ? புரியவில்லை.

இணையத்தில் இன்று மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தாஜ் ஹோட்டலை பார்வை இடுகிறார் என்ற செய்தியை படித்தேன் .அவருடன் பல காவல் அதிகாரிகள் உடன் பல அரசியல் அதிகாரிகள் .இது ஒரு முதல்வரின் வருகை .இதில் சினிமா இயக்குனர் ராம் கோபால் வர்மா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லை.ராம் கோபால் வர்மாவின் அடுத்த படத்தில் நடிக்கும் முதல்வரின் மகன் ஹ்ரிடேஷ் தேஷ்முக்கும் அந்த கூட்டத்தில் இருக்கிறார்.அவர்கள் பார்த்து என்ன செய்து விட போகிறார்கள் .

அந்த ஹோட்டலின் உரிமையாளர் ரத்தன் டாடா நேற்று வரை உள்ளே செல்லவில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.இதை மேலும் கொடுமையாக்க மகாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டில் என்பவர் கொடுத்த பதில்." small incidents like this do happen in big cities " How ridiculous comment . அதற்கு அவர்கள் அரசியல் கட்சி சொன்ன பதில் " அமைச்சருக்கு ஹிந்தி பேச தெரியாது " என்பது !

நரேந்திர மோடியின் உதவி தொகையை காக்கரே குடும்பம் மறுத்ததை ஒட்டி அமர் சிங்க் என்ற விலைபோன அரசியல் வாதியின் வார்த்தைகள் உண்மையில் மன்னிக்க முடியாத வார்த்தைகள்.


கக்கரே இறந்து விட்டார் என்ற செய்தி ரெடிப்ப் செய்தியில் வந்த உடன் கீழே ஒரு கமெண்ட் " நான் என் மனைவியிடம் சொல்லி கொண்டிருந்தேன் ,சத்வியை கைது செய்து கக்கரே தவறு செய்கிறார் ,அவர் தண்டனை அனுபவிக்க போகிறார் என்று.அதே போல் அவர் பாத்து காக்க நினைத்த முஸ்லீம் தீவிரவாதிகளே கொன்று விட்டார்கள்."

பிரியங்கா காந்தி இந்த நிலையை பற்றி ' இந்திரா காந்தி இந்த நிலையை வேறு விதமாக கையாண்டிருப்பார் ! நம்மை எல்லாம் பெருமை கொள்ள செய்து இருப்பார் " என்ற பேட்டி.

இந்தியாவின் அரசியல் அமைப்புவாதிகள் பாகிஸ்தானை பற்றி பேசும் பொழுது ஐ.எஸ் .ஐ என்ற அமைப்பின் ஜெனரல் வருகையை எதிர்பார்த்து கொண்டு அதை பாகிஸ்தான் மறுக்கவே அதே நிலையில் இருந்து பதட்ட நிலையில் இருநாடும் அமைந்து இருப்பது.

ஆபரேஷன் சைக்ளோன் நடந்து கொண்டிருக்கும் பொழுது அத்வானி தாஜ் ஹோட்டல் அருகே சென்றது .

இத்தனையும் நடந்து முடிந்தும் நமது அரசாங்கம் இன்னும் ஒரு பொறுப்பான செய்தி வெளியிட முடியாமல் திணறி கொண்டிருப்பது.

மும்பை போன்ற ஒரு நகரத்தில் உள்ள தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டும் புத்தி வராமல் சென்னை போன்ற நகரங்களில் இன்னும் பாதுக்காப்பை அதிகரிக்காமல் இருப்பது.

குறிப்பாக சென்னை தாஜ் கன்னிமராவில் இன்னும் பாதுகாப்பு போடாதது.
இதை எல்லாம் சாதரண மக்களுக்கு மீடியாக்கள் operational evidence தருவது .

இவை எல்லாம் மும்பை சம்பவங்களை பார்த்து கேலி செய்வது போல் தான் இருக்கிறது.என்னால் எந்த நிலையும் எடுத்து இதை பற்றி எழுத முடியாது.நமக்கு இப்பொழுதைய தேவை ஒன்றும் ஒரு கட்டுப்பாடான சட்டமோ அல்ல அமைச்சர்களின் மாற்றமோ அல்ல .நம் தேவை "பாதுகாப்பு.அப்பாவி மக்கள் எத்தனை முறை மதம் என்ற சாக்கில் கொல்லப்பட வேண்டும் தெரியவில்லை.


ஒரு உண்மை அறிந்து கொள்ள வேண்டும்.தீவிரவாதம் என்பது மதத்தை சார்ந்தது அல்ல அது ஒரு மனசிக்கல் கொண்ட மனிதர்கள் செய்யும் அட்டகாசம் இதில் ஆண்டவனையும் இழுக்க முடியாது ,அவன் கூட்டத்தையும் இழுக்க முடியாது.அமெரிக்கா அல் கொய்தாவின் தாக்குதலில் இருந்து மீண்டு வந்தது ஆச்சரியம் அளிக்கிறது.அதன் பிறகு ஊடுருவல்கள் தடுக்கப்பட்டு இருக்கின்றன.முறியடிக்க பட்டுஇருக்கின்றன .ஆனால் இங்கு இந்த வருடம் மட்டும் இது பதினான்காவது தாக்குதல் .என்ன சொல்கிறது இந்த தாக்குதல்கள் .


நமது அமைப்புக்களும் நமது அங்கங்களும் சகிப்பு தன்மை என்ற சொல்லை தாண்டி அசிங்கமாக முன்னேறி கொண்டிருக்கிறோம்.டெக்னாலஜி என்ற வார்த்தை இந்தியாவில் எப்படி எல்லாமோ வளர்ச்சி கண்டாலும் அந்த வார்த்தையின் முழு பயனை ஒரு இந்தியன் இந்த மாதிரி ஒரு சமயத்தில் பயன் படுத்த முடியாமல் திணறுவது வருத்தம் அளிக்கிறது.நமது மூளை எல்லாம் அடுத்த நாட்டிற்க்கு பணி செய்ய ஏலம் விடப்பட்டிருப்பதால் நம் நாட்டிற்க்கும் அதன் பாதுகாப்பிற்கும் இது வரை நமது மூளை வேலை செய்யவே இல்லை.தீவிரவாதிகள் ஜீ ,பீ .எஸ் பயன்படுத்தி தாஜ் உள்ளே நகர்ந்து கொண்டிருந்தார்கள்.பிளாக் பெர்ரி மூலம் தொடர்பு கொண்டார்கள்.பிளாக் பெர்ரி மூலம் தொடர்பு கொண்டால் முதலில் கால் பிளாக் பெர்ரி செர்வருக்கு சென்ற பிறகே நமது சர்வருக்கு இணைப்பை ஏற்படுத்தும்.

ஆனால் நமது மார்கோஸ் படைகள் உள்ளே செல்லும் பொழுது அவர்கள் கையில் ஒரு வரைபடம் கூட இல்லாமல் இருந்தும் ,அவர்களுக்கு விளக்க ஒரு அதிகாரி கூட இல்லாமல் இருந்தது நம்மை யோசிக்க வைக்கிறது.

நாம் இத்தனையும் ஒரு கணத்தில் இழந்து விட்டோம்.எந்த இதனையின் விலை என்ன ? இது எங்கே செல்கிறது என்பதை நோக்கி இருப்பதும் முட்டாள்தனம்.இதனால் நமக்கு நேர இருக்கும் மாற்றங்கள் மட்டும் நிச்சயங்களாக கண் முன்னே தெரிகிறது.

இந்த ஒரு பொருளாதார சூழ்நிலையில் யாரும் இன்னும் ஒரு போருக்கு தயாராக இல்லை.என் நண்பன் சுந்தர் ராஜனுடன் நேற்று பேசி கொண்டிருந்தேன்.அவன் வைத்த கருத்தும் இதுவே " இரண்டு பேர் கிட்டயும் அணுசக்தி இருக்கிறது அதனால் இருவரும் மோதிக்கொள்ள மாட்டோம் "

நானும் அவனும் அன்று பேசி கொண்டிருந்த நேரம் தாண்டி சில நேரம் இதை பற்றி நினைத்து கொண்டிருந்தேன்.வீண் நேரம் செலவழிக்கப்படாமல் இந்த நேரத்தின் தேவைகள் பேச்சுவார்த்தைகள் அல்ல என்பதை மனதில் கொண்டாலே பாதிக்கு மேல் பாதுகாப்பு ஏற்படும் என்பது என் கருத்து.இதை ஒன்றும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கொண்டு செல்ல முடியாது தான்.ஆனால் இந்த நிகழ்வுக்கு இதை ஏற்படுத்திய தீவிரவாத கும்பலை தாண்டி பதில் சொல்ல வேண்டியது நாம் தான்.நாம் என்றால் நாம் உருவாக்கிய அரசு ,அமைப்பு ,ஜனநாயகம் எல்லாம் தான்.

நாளையும் இதை மும்பையில் நடந்த ஒரு ரயில் விபத்து போல் ஆற போட்டு கொண்டோ அல்ல 1993 இல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு போல் இழுத்து அடித்து ஆதாரம் சேர்கவே பல வருடங்கள் ஆகி கொண்டிருந்தால் பாலிவுட் சினிமா மூன்று படம் எடுத்து விடுவார்கள் ,எனக்கு பிறக்க போகும் பிள்ளை அதை பற்றி பேசி கொண்டிருப்பானே தவிர அது முடிந்து இருக்காது.
மும்பை என்ற உலகம் மீண்டு வரும் ,அது எல்லோருக்கும் தெரியும்.மும்பையை இதற்கு மேல் தூங்க வைக்க முடியாது.ஆனால் இனி நேரும் விழிப்பில் தெரியும் ஒரு வித கலக்கம் தான் இந்தியாவின் பாதுகாப்பை வர்ணனை செய்ய போகிற தருணங்கள்.மும்பை எப்படி சுவடுகளை மறைத்து வாழ்கையை திரும்ப மக்களுக்கு தரபோகிறது என்பது ஒரு வித தெளிவில்லா விஷயமாகவே இருக்கிறது.

கண்முன்னே கமலுடன்
அரவிந்த் சாமியுடன்
பறந்து சென்ற
அந்த தாஜ் ஹோட்டல் முன்
வீடு கொண்டிருந்த
புறாகூட்டங்கள் எங்கே ?
எங்கே அமைதிக்கு
தூது செல்லவேண்டும்
என்று தெரியாமல் மாண்டுவிட்டனவோ ?
அல்ல அழிக்கபட்டனவோ ?
மனதில் தோன்றிய ஒரு கவிதை.
எனக்கு இந்த மூன்று நாள் விடுப்பை களிப்பாக கொண்டாட முடியவில்லை.எத்தனை முறை இப்படி நடந்து இருக்கும்.எத்தனை முறை நமக்கு மட்டுமே நேர்ந்து இருக்கும்.நாம் என்ன சகிப்பு தன்மையின் உச்சத்தில் நின்று கொண்டு இருக்கிறோமா அல்ல முட்டாள்தனத்தின் பிடரியில் அமர்ந்து இருக்கிறோமா ? எதுவும் விளங்க வில்லை.நான் இன்று உண்டு ,அமர்ந்து ,உறங்கும் சமயம் என்னை போல் ஒருவன் அந்த நகரத்தை அழிக்க மூளை சலவை செய்ய படுகிறான்.அவன் கண்களில் என்னை போல் ஒரு ஏக்கம் இருந்தாலும் அவன் ஒரு ஆழமான போராளியாக மாற்ற படுகிறான்.

இந்த மும்பை என்ன பாவம் செய்து விட்டது . செய்திகளில் தொலைக்காட்சிகளில் மும்பை தீவிரவாதத்திற்கு அன்னியம் கொண்டது அல்ல என்று சொல்லும் பொழுது எரிச்சல் வருகிறது.மும்பைக்கு என்ன தீவிரவாதம் நேர்ந்து விடப்பட்டதா ? இல்லையே.மும்பை ,வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரு சேர காட்டும் ஒரு அதிசியம்.

இந்துவும் முஸ்லிமும் கிறிஸ்துவனும் தன் கனவுக்கு போராடி கொண்டிருக்கும் ஒரு கூடாரம்.காலை உணவில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரை தன்னை யார் நோட்டம் இடுகிறார்கள் என்று கூட தெரியாமல் சுற்றி திரியும் ஒரு வாகனம். மும்பையில் கனவுகள் பல ஆரம்பம் ஆகி முடிவதால் தான் மும்பைக்கும் மற்ற நகரத்திற்கும் ஒரு வித வித்தியாசம் தெரிகிறது.மும்பை நகரம் என்பதை விட அது ஒரு தனி உலகம்.அதன் உள்ளே அடைந்து கிடக்கும் பல வித கனவுகளை தோண்டி எடுக்க தான் ஒவ்வொரு மனிதனும் தனக்குளே ஒரு வாழ்வை அங்கே அமைத்து கொள்கிறான்.சகிப்பு தன்மையும் சரி ,மதகொள்கையும் சரி அங்கே பெருக்கெடுத்து ஓடுவதற்கு காரணமும் இந்த பல தரப்பட்ட கனவுகள் மோதிகொள்வதால் தான்.

ஷேர் ,பாலிவுட் ,மாடலிங் ,ஹார்பர்,இன்ஜினியரிங் ,ஏற்றுமதி ,கிரிக்கெட் , நீதித்துறை ,பெட்டிங்,நுண்கலை எல்லாவற்றிற்கும் இருக்கும் ஒரே சரணாலயம் மும்பை.அந்த சரணாலயம் அவர்கள் எல்லோரிரடமும் கற்று கொடுக்கும் ஒரு விஷயம் வாழ்கையின் வேகம் ."வேகம்" அவர்கள் அத்தனை பேருக்கும் தொற்றிகொள்வதாலே வேலை தேடும் இளைஞனும் அருகில் இருக்கும் கோடீஸ்வர தொழிலதிபரையும் கண்டு கொள்ள நேரம் இல்லாமல் பயணித்து கொண்டிருப்பான்,ஏக்கத்தில் அலையும் இளைஞனும் அருகில் நிற்கும் பெண்ணை சீண்ட நேரம் இல்லாமல் சென்று கொண்டிருப்பான்,பேரம் பேச இடம் தராமல் ஆட்டோவும் டாக்சியும் நம் முன்னே பறந்து கொண்டிருக்கும்.டப்பாவாலாக்கள் ஊர் முழுக்க சாப்பாட்டு டப்பாவை கொண்டு செல்வது மக்களின் வேகத்தால் ஏற்பட்ட நேர பற்றாகுறையை தீர்க்க தான்.அது மும்பையில் மட்டுமே சாத்தியம் ஆக கூடிய உண்மை ,நிதர்சனம்.

மும்பை என்ற உலகம் வாழ்வின் தரத்தை வைத்து அல்ல ,வாழ்கையை வாழும் விதத்தில் எடை போட படுகிறது.அதன் இடமும் ,நேரமும் தரும் அடையாளங்கள் நம்மை போன்ற வெளி மாநிலத்தவருக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை தான் தரும்.மும்பை என்பது இந்தியாவின் வணிக தலைநகரம் என்பதை விட அங்கே புரளும் பணத்தை அடக்கி ஆளுவது அந்த மக்கள் அல்ல அவர்கள் கொடுத்த நேரம் என்ற பகடை.மும்பையில் பணத்தை தேக்கி வைப்பது என்பது ஒரு மறந்து போன விஷயம்.இதை என் பல மும்பை நண்பர்களிடம் பார்த்து இருக்கிறேன்.மும்பை பணம் இருந்தாலும் வாழ்வை தரும்,பணம் இல்லாவிட்டலும் வாழ்வை தரும்.அது தான் அதன் வீரியம்.மனிதனின் சொர்க்கபுரி ,மிருகத்தின் நரகம்.அது தான் இங்கு நடந்தது.

நான் ஒவ்வொரு முறை மும்பை செல்லும் பொழுதும் நான் சென்ற விமானம் அந்த தாராவி மேல் பறந்து சாண்டா க்ருஸ் விமான நிலையத்தில் இறங்கும் பொழுதும் என் நேரங்கள் அளவிட படுவதை உணர்ந்து இருக்கிறேன்.மும்பையில் மட்டும் நேரத்தை சரியாக கணக்கு செய்யாமல் தரை இறங்கினால் கேலிக்குள் ஆவது நாம் தான்.நம் அத்தனை உலகமும் செயல் இழந்து அப்படியே நிற்க வேண்டியது தான்.

இப்படி பட்ட நகரம் ஸ்தம்பித்து நிற்கிறது.ஒரு முறை அல்ல மூன்று நாட்களாக நிற்கிறது.அந்த கொடூர பழிகள் நீங்க நாட்கள் ,மாதங்கள்,செலவுகள்,நிதிகள்,மனங்கள் ,சந்திப்புகள் எடுக்கும்.மும்பை என்ற நகரம் மீண்டும் திரும்பி பழைய நிலைக்கு சுழலும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.ஆனால் அப்படி திரும்பும் பொழுது மனங்கள் பெற்ற மாற்றங்களும் அவர்கள் எலும்புகளில் தெரியும் ஒரு வித நடுக்கமும் இந்த மூன்று நாட்கள் நடந்தவற்றை நினைவு படுத்தி கொண்டே இருக்கும்.அது அவர்கள் கண்களிலோ ,அல்ல செயல்களிலோ தெரியா விட்டாலும் அவர்கள் உள்ளே எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டு நடுக்கம் கொடுக்கத்தான் செய்யும்.
மூன்று நாட்களாக யோசித்து கொண்டும் ,படித்து கொண்டும் இருக்கும் இந்த விஷயங்கள் எழுத்துக்களாக ! இதில் ஒரு விஷயம் என்னவென்றால் புதன்கிழமை இரவு சென்னையில் மழை அதிகம் பெய்தமையால் இரவு பதினோரு மணி அளவில் வீடு சென்று நேராக தூங்க சென்று விட்டேன்.காலை ஏழு மணி அளவில் அலுவலகம் கிளம்பி விட்டதால் என் நண்பர்களுடனும் பேச முடியவில்லை.என் இன்பாக்ஸ் ஐ திறந்து பார்த்தால் என் கம்பெனி சி .ஈ .ஒ அமெரிக்காவில் இருந்து மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவம் என்று மெயில் அனுப்பி இருந்தார்.நான் அதை திறந்து படித்த உடன் தான் விபரம் அறிந்தேன்.கேவலமாக இருந்தது.இந்த ஐந்து நாட்களாக நான் டி .வீ சேனல் அருகில் செல்லவே இல்லை.ஒரு விநாடி கூட அந்த காட்சிகளை பார்க்க வில்லை.நான் அறிந்தது எல்லாம் நாளிதழிலும் ,இன்டர்நெட் செய்திகளும் தான்.இந்த நேரத்திலும் இந்த பாழாய் போன அரசியல் இப்படி விளையாடுகிறது.